DMK district on behalf of people affected by the storm Gaja plea to Rs. 15 lakh worth relief Goods supplies
பெரம்பலூர் மாவட்டத்தில் இருந்து கஜா புயல் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரிசி, பருப்பு, வெங்காயம், துணிமணிகள், போர்வை, பிஸ்கட், தண்ணீர் பாட்டில்கள் உள்ளிட்ட
ரூ.15 லட்சம் மதிப்புள்ள நிவாரணப் பொருட்களை மாவட்ட கழகச் செயலாளர் குன்னம் சி. இராஜேந்திரன் தலைமையில் அனுப்பி வைத்தனர்.
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஆனைக்கினங்க கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பெரம்பலூர் மாவட்ட தி.மு.க.சார்பில் அரிசி, பருப்பு, துணிமணிகள், போர்வை, பிஸ்கட், தண்ணீர் பாட்டில்கள் உள்ளிட்ட ரூ. 15 லட்சம் ரூபாய் மதிப்புள்ள நிவாரணப் பொருட்களை மாவட்ட திமுக அலுவலகத்தில் இருந்து மாவட்ட செயலாளர் குன்னம் சி.இராஜேந்திரன், திருச்சி கலைஞர் அறிவாலயத்திற்கு லாரி மூலம் அனுப்பி வைத்தார். இதில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ம. இராஜ்குமார், மாவட்ட துணைச் செயலாளர் தழுதாழை பாஸ்கர், நகரச் செயலாளர் எம். பிரபாகரன், வேப்பந்தட்டை மேற்கு ஒன்றிய செயலாளர் செ.நல்லதம்பி, கிழக்கு ஒன்றிய பொறுப்பாளர் வீ. ஜெகதீசன், மாவட்ட மகளிரணி அமைப்பாளர் மகாதேவிஜெயபால், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் பெ.அன்பழகன் மற்றும் அ. அப்துல்கரீம் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.