DMK is a corrupt party. We are here to serve you. Choose good people: candidate Parivendar Speech!
தமிழ்நாட்டில் நடப்பது ஊழல் ஆட்சி என்று நேற்று முசிறி சட்டமன்ற தொகுதியில் வாக்குசேகரிப்பில் ஈடுபட்ட டாக்டர் பாரிவேந்தர் குற்றம்சாட்டினார்.
தேசிய ஜனநாயக கூட்டணியில், பெரம்பலூர் எம்.பி தொகுதியில் ஐஜேகே சார்பில் வேட்பாளராக டாக்டர் பாரிவேந்தர் போட்டியிடுகிறார்.
பாராளுமன்ற தொகுதி முழுவதும் கூட்டணி கட்சியினருடன் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறர்ர்.
இந்நிலையில் முசிறி சட்டமன்ற தொகுதி, தா.பேட்டை ஒன்றிய பகுதிகளில் டாக்டர் பாரிவேந்தர் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அயித்தாம்பட்டி பகுதியில் திரண்டிருந்த திரளான பொதுமக்களிடம் டாக்டர் பாரிவேந்தர் பேசியதாவது:
2019 தேர்தலில் 6 லட்ச வாக்குகள் அளித்து என்னை வெற்றி பெறச் செய்தீர்கள். நான் செய்த பணிகள் குறித்து புத்தகமாக வழங்கி உள்ளேன். இது போன்று எந்த பாராளுமன்ற உறுப்பினரும் செய்ததில்லை. எம்பி தொகுதியில் 42 வகுப்பறைகள், சமூக கூடங்கள், ரேசன் கடை ஆகியவை கட்டி கொடுத்துள்ளேன்.
2019 தேர்தலில் ஒரு வாக்குறுதி அளித்தேன். 1200 மாணவர்களை தேர்ந்தெடுத்து தற்போது 1200 மாணவர்களை பட்டதாரிகளாக ஆக்கினேன். அந்த குடும்பங்கள் தற்போது மகிழ்ச்சியாக உள்ளது. 2024 தேர்தலில் மீண்டும் வந்துள்ளேன். மீண்டும் ஒரு வாக்குறுதி தருகிறேன். 1500 ஏழை குடும்பங்களுக்கு உயர் மருத்துவம் வழங்கப்படும். 10 ஆண்டுகளாக மோடி சிறந்த ஆட்சி செய்துள்ளார். செம்மையான ஆட்சி செய்துள்ளார்.
உலக தலைவர்கள் மோடியை பார்த்து ஆச்சரியப்பட்டு உள்ளனர். மோடி – தூய்மையான ஆட்சி தந்துள்ளார். ஆனால் தமிழ்நாட்டில் ஊழல் ஆட்சி தான் நடந்து வருகிறது. தமிழ்நாட்டில் ஊழலும், ஊழல் வாதிகளுமாக உள்ளனர். திமுக கட்சியே ஊழல் கட்சி. நாங்கள் உங்களுக்கு சேவை செய்வதற்காக தான் வந்துள்ளேன். நல்லவர்களை தேர்ந்தெடுங்கள் என பேசினார்.
அயித்தாம்பட்டி, சொரியம்பட்டி, சிவிலிப்பட்டி, தெற்கு அயித்தாம்பட்டி, ராசிபுரம், சீவம்பட்டி, எம்.புதுப்பட்டி, திருமுருகன் நகர், அழகாபட்டி பாரதிநகர், தொப்பளாம்பட்டி, சிலோன் காலனி, அட்லாப்பட்டி,மேட்டுப்பட்டி, முத்தம்பட்டி, தும்பலம், சூரம்பட்டி,
சோளம்பட்டி, கேணிப்பள்ளம், பெருமாள்பாளையம், கலராவள்ளி, செல்லிப்பாளையம், சேருகுடி, சிட்டலாரை, பைத்தம்பாறை, மாவிலிப்பட்டி, கிருஷ்ணாபுரம், தாதம்பட்டி, வாளசிராமணி, கோணப்பம்பட்டி, கஞ்சம்பட்டி, வெள்ளாளப்பட்டி, ஆண்டிப்பட்டி, ஜடமங்கலம், பாப்பாப்பட்டி, நீலியாம்பட்டி, மேலூர், அஞ்சலம், பூலாஞ்சேரி, வேலம்பட்டி
மகாதேவி, மகாதேவி புதூர், நல்லப்பநாயக்கன்பட்டி, முத்துராஜபாளையம், பிள்ளாப்பாளையம், ஊரக்கரை, கலிங்கப்பட்டி, ஜம்புமடை, ஊரக்கரை, மலையப்பநகர், பெருகனூர், தா.பேட்டை, செவந்தாம்பட்டி, வடமலைப்பட்டி, என்.கருப்பம்பட்டி, தேவானூர், தேவானூர் புதூர், ஆராய்ச்சி, தாண்டவம்பட்டி, வளையெடுப்பு, சக்கம்பட்டி,
மேட்டுப்பாளையம், சாலக்காடு, அமராவதி சாலை, எம்.கருப்பம்பட்டி, கோணங்கிப்பட்டி, கரிகாலி, உத்தண்டம்பட்டி, ஊருடையாப்பட்டி, காருகுடி, சின்ன காருகுடி ஆகிய கிராம மக்களிடையே வேட்பாளர் பாரிவேந்தார் வாக்குகளை சேகரித்தார்.
ஐஜேகே, பாஜக உள்ளிட்ட தேசிய ஜனநாயக கூட்டணி கட்சியினர் பலர் கலந்து கொண்டனர்.