DMK meeting on behalf of the Eastern District of Namakkal Panchyat sabha Meeting
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தலின்படி, மக்களிடம் செல்வோம் மக்களிடம் சொல்வோம், மக்கள் மனதைவெல்வோம் என்ற மூன்று முழக்கங்களை முன் வைத்து, தமிழகத்தின் அவலநிலைக்கு காரணமான, மத்திய, மாநில அரசுகளுக்கு முற்றுப் புள்ளி வைக்கும் வகையில் நாமக்கல் கிழக்கு மாவட்டம், சேந்தமங்கலம் சட்ட மன்ற தொகுதி, எருமப்பட்டி ஒன்றியத்திற்கு உட்பட்ட தேவராயபுரம், வரகூர், பவித்திரம், பவித்திரம் புதூர் ஆகிய ஊராட்சிகளில் ஊராட்சி சபைக் கூட்டங்கள் மாவட்ட பொறுப்பாளரும், மத்திய முன்னாள் இணையமைச்சருமான செ.காந்திசெல்வன் தலைமையில், நாடாளுமன்ற தொகுதி பொறுப்பாளரும், முன்னாள் அமைச்சரும், கழக சொத்து பாதுகாப்புக்குழு துணைத் தலைவருமான பொங்கலூர் ந.பழனிசாமி கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.
இக்கூட்டத்தில் மாவட்ட துணைச் செயலாளர் கே.பொன்னுசாமி, தலைமை செயற் குழு உறுப்பினர் பவித்திரம் கண்ணன், ஒன்றிய செயலாளர்கள் பி.பாலு (எ) பாலசுப்ரமணியம், மாவட்ட வழக்கறிஞர் அணி அமைப்பாளர் வ.க.அறிவழகன், ஊராட்சி செயலாளர்கள் ராஜமூர்த்தி, திவாகர், அழகேசன், சரவணன், ஜெயகோபி, விமல், பிரகாசம், பார்த்தீபன், ஆசைத்தம்பி, தங்கவேல், முத்துசாமி, எத்திராஜ், பன்னீர் செல்வம், ரவி, தங்கராசு, சிவக்குமார், நாகராஜ், கோபி, ஒன்றிய கழக நிர்வாகிகள், ஊராட்சி கழக நிர்வாகிகள், கழக தொண்டர்கள், மூத்த முன்னோடிகள் மற்றும் பொதுமக்கள் எனஅனைவரும் கலந்து கொண்டனர்.