Doctors struggle in government hospitals: sick people are unable to get treatment || அரசு மருத்துவமனைகளில் வைத்தியர்கள் போராட்டம்: சிகிச்சை பெற முடியாமல் நோயர்கள் தவிப்பு
பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் மருத்துவ பட்ட மேற்படிப்பில் இருந்து வந்த 50 சதவீத இட ஒதுக்கீடு ரத்து செய்யப்பட்டுள்ளதை கண்டித்து வைத்தியர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

அரசு டாக்டர்களுக்கு மருத்துவ பட்ட மேற்படிப்பில் இருந்து வந்த 50 சதவீத இட ஒதுக்கீடு ரத்து செய்யப்பட்டுள்ளதை கண்டித்து தமிழ்நாடு அரசு மருத்துவர்கள் சங்கம் சார்பில் தமிழகம் முழுவதும் அரசு ஆங்கிலம் மருத்துவ வைத்தியர்கள் கடந்த 5 நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். வைத்தியர்கள் போராட்டத்தால் புறநோயாளிகள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். இந்நிலையில், பெரம்பலூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் இன்று வைத்தியர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

மருத்துவமனையில் உட்பகுதியில் நடைபெறும் இப்போராட்டத்தில் மருத்துவர் சங்கத் தலைவர் தலைமையில் பயிற்சி டாக்டர்கள் உட்பட சுமார் 50 மேற்பட்டவர்கள் பேர் கலந்து கொண்டனர். மாலை 5 மணி வரை போராட்டம் நடைபெறும் என்றும் தெரிவித்துள்ளனர். பெரம்பலூர் மாவட்டம் முழுவதும் 100க்கும் மேற்பட்ட டாக்டர்கள் இன்று போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்தில் அரசு மருத்துவமனைகளும் ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கும் தினமும் ஆயிரக்கணக்கான புறநோயாளிகள் சிகிச்சை பெற்று செல்வார்கள்.

புறநோயாளிகள் சிகிச்சை பிரிவுகள் அனைத்தும் இன்று செயல்படவில்லை. ஒவ்வொரு சிறப்பு பிரிவுகளிலும் நோயாளிகள் சிகிச்சை பெறுவதற்காக காத்திருந்தனர். ஆனால் வைத்தியர்கள் வராததால் நோயாளிகள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். புறநோயாளிகள் பிரிவு தவிர உள்நோயாளிகளுக்கும் சிகிச்சை அளிப்பதில் சுணக்கம் ஏற்பட்டது. பயிற்சி மருத்துவர்கள் மூலம் சிகிச்சை அளிக்கப்பட்டது. பெரம்பலூர் மாவட்டத்தில் அரசு மருத்துவமனைகளில் வைத்தியர்களின் போராட்டத்தால் நோயாளிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News Today - Kalaimalar.

error: Content is protected !!