Doctors struggle wearing black badge in Perambalur
மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் டாக்டர்கள் மீது நடந்த வன்முறை தாக்குதலை கண்டித்தும்,தேசிய அளவில் டாக்டர்கள் பாதுகாப்பு சட்டம் இயற்ற கோரியும், இந்திய மருத்துவ சங்கம் மற்றும் அரசு டாக்டர்கள் சங்கம் சார்பில் இன்று ஒரு நாள் கருப்பு பேட்ஜ் அணிந்து பணியில் ஈடுபடுவது என முடிவு செய்யப்பட்டது. இதன்படி பெரம்பலூர் மாவட்டத்தில் இன்று சுமார் 600 டாக்டர்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதன் ஒரு பகுதியாக பெரம்பலூர் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் மாவட்டத் தலைவர் டாக்டர்.அர்ஜுனன் தலைமையில் கருப்பு பேட்ஜ் அணிந்து கோரிக்கையை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டமும் நடத்தினர்.