Don’t vote for Pulli Raja’s who rule by telling lies: Parivendar’s campaign to contest on the lotus symbol!

பெரம்பலூர் எம்.பி தொகுதியில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் தாமரை சின்னத்தில், பாரிவேந்தர் போட்டியிடுகிறார். அவர், ஆலத்தூர் ஒன்றியத்தில், கூட்டணி கட்சியினருடன் வாக்குகள் சேகரித்தார். அப்போது அவர் பேசியதாவது:

ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு என்னை சுமார் 6 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் என்னை தேர்வு செய்தீர்கள். இப்போது இரண்டாவது முறையாக உங்களிடம் வாக்கு கேட்டு வந்துள்ளேன்.

இரண்டாவது முறையாக தொகுதிக்குள் வருவதற்கு ஒரு துணிச்சல் வேண்டும். உங்களுக்கு சேவை செய்தால் மட்டுமே உள்ளே வர முடியும்.
பெரம்பலூர் பாராளுமன்ற தொகுதியை பொறுத்தவரையில் உங்களுக்கு என்ன செய்ய வேண்டுமோ அதை முறையாக செய்து உள்ளேன்.
பாராளுமன்றத்தில் எத்தனை முறை பேசினேன் எத்தனை முறை பிரதமரை சந்தித்தேன் மத்திய அமைச்சர்களை சந்தித்தேன் என்பதை எல்லாம் புத்தகமாக வெளியிட்டுள்ளேன்.

அதனை படித்தாலே நீங்கள் தெரிந்து கொள்ளலாம். தமிழ்நாட்டிலேயே ஏன் இந்தியாவிலேயே பாராளுமன்ற உறுப்பினர் தனது தொகுதியில் செய்த சாதனைகளை புத்தகமாக வெளியிட்ட ஒரே பாராளுமன்ற உறுப்பினர் நானாகத்தான் இருக்க முடியும்.

டி.களத்தூர் கிராமத்தில் மட்டும் சென்ற ஆண்டு 2019 வாக்குறுதியின் படி இலவச உயர் கல்வி திட்டத்தின் கீழ் 17 மாணவர்கள் எஸ்.ஆர்.எம். பல்கலைகழகத்தில் பயின்று வருகின்றனர். பெருமையாக உள்ளது. என்னை தேர்ந்தெடுத்தால் மீண்டும் இலவச உயர் கல்வி திட்டம் தொடரும் எனவும். நல்லவர்களுக்கு வாக்களியுங்கள் என தெரிவித்தார்.

இன்று பால் விலையில் தொடங்கி, மின் கட்டணம், சொத்து வரி, வீட்டு வரி, பத்திரப்பதிவு உள்ளிட்ட அனைத்து வரிகளும் உயர்த்தப்பட்டு விட்டது. விலை வாசியும் உயர்ந்து விட்டது. இதற்கெல்லாம் காரணம் தமிழ்நாடு அரசு தான். ஆனால் இவர்கள் சொல்வார்கள் இருக்கலாம் காரணம் மோடி அரசு என்று.
இது ஏமாற்று வேலை. ரேஷன் கடைகளில் வழங்குகிற ஒரு கிலோ அரிசியின் மொத்த விலை ரூபாய் 34. இதனை உங்களுக்கு இலவசமாக வழங்குகிறார்கள். இதில் மோடி அரசு ரூபாய் 32 ஐ கொடுக்கிறது.

ஆனால், தமிழக அரசு ரூபாய் 2 ஐ மட்டும் கொடுக்கிறது. ஆனால் என்ன சொல்வார்கள் நாங்கள் தருகிறோம் என்று. மோடி தலைமையிலான ஆட்சி ஊழலற்ற ஆட்சி. விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூபாய் 12 ஆயிரம் வழங்குகிற ஆட்சி மோடி ஆட்சி. விவசாயிகளுக்கு வழங்கப்படுகிற உரம் அதிக விலைக்கு வாங்கி அவற்றை குறைந்த விலையில் விவசாயிகளுக்கு தருகிற அரசு மோடி அரசு தானே தவிர, தமிழ்நாடு அரசு அல்ல.

கடந்த முறை நான் வாக்குறுதி கொடுத்தேன் அது என்ன வாக்குறுதி என்றால் தொகுதியில் 1200 ஏழை குடும்பத்தைச் சேர்ந்த மாணவ மாணவிகளை தேர்வு செய்து அவர்களுக்கு இலவசமாக உயர்கல்வி கொடுப்பேன் என்று சொல்லி இருந்தேன். அதுபோலவே ஏழை குடும்பத்தைச் சேர்ந்த மாணவ மாணவிகளை தேர்வு செய்து அவர்களுக்கு இலவசமாக உயர்கல்வி கொடுத்துள்ளேன். இதன் மூலம் எனக்கு செலவு ரூபாய் 118 கோடி.
இது போன்ற சொந்த பணத்தில் வேறு எந்த பாராளுமன்ற உறுப்பினரும் செய்ததில்லை.

இந்த வருடத்தில் வாக்குறுதி ஒன்றை கொடுக்கிறேன். அது என்ன வாக்குறுதி என்றால் தொகுதியில் 1500 ஏழை குடும்பங்களைச் சேர்ந்த வீட்டில் ஒருவருக்கு உயர் மருத்துவ சிகிச்சை. உயர் மருத்துவ சிகிச்சை என்றால் என்ன ஹார்ட் ஆபரேஷன் மூட்டு ஆபரேஷன் இது போன்ற ரூபாய் 10 லட்சம் செலவிலான மருத்துவ சிகிச்சைகளை இலவசமாக அவர்களுக்கு வழங்க உள்ளேன்.

இது எனது இந்த ஆண்டு தேர்தல் வாக்குறுதியாக உங்களுக்கு சொல்லிக் கொள்கிறேன். நான் பாராளுமன்ற உறுப்பினராக இருக்கும் போது தொகுதி வளர்ச்சி நிதி ஒவ்வொரு ஆண்டும் 5 கோடி கொடுப்பார்கள். கொரோனா காலம் போக ரூபாய் 17 கோடி கொடுத்தார்கள். அவற்றை மக்களுக்கு பள்ளி வகுப்பறை கட்டிடம், மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி, கழிவறைகள் என மக்கள் அடிப்படை தேவைகளுக்காக செலவிட்டு உள்ளேன். எனவே மத்தியில் ஊழலற்ற ஆட்சி மோடி தலைமையில் மீண்டும் அமைய எனக்கு தாமரை சின்னத்தில் வாக்களியுங்கள் என்றார்.

அரசியல்வாதியினாலே சம்பாதிக்க தான் வருகிறார் ஊழல் பண்ண வருகிறார் என நினைப்பார்கள். நான் பாராளுமன்றத்தில் யாருக்காக பேசினேன் எதற்காக பேசினேன் என்று பதிவுகள் உள்ளது அதையும் நான் புத்தகத்தில் போட்டு உள்ளேன் இந்த புத்தகம் போடுவதற்கு மிகப்பெரிய தைரியம் வேண்டும் இதில் ஐந்தாம் வகுப்பு படித்த மாணவன் கூட தெளிவாக புரிந்து கொள்ளும் வகையில் படத்துடன் போட்டுள்ளேன்.

நான் தன்னிறைவு பெற்றவன். சம்பாதிக்க வேண்டி எந்த ஊழலும் செய்ய வேண்டிய அவசியம் எனக்கு இல்லை, உங்களுக்கு சேவை செய்ய மட்டுமே வந்துள்ளேன். எனக்கு ஒதுக்கப்பட்ட நிதியை 100 சதவீதமாக பயன்படுத்தி உள்ளேன். பெரும்பாலான எம்பிக்கள் நிதியை பயன்படுத்தாமல் விட்டு விடுவார்கள் மீண்டும் அந்த பணம் டெல்லிக்கே போய்விடும் ஆனால் நான் அப்படி செய்யவில்லை. தொகுதிக்கு வழங்கப்பட்ட நிதியை முழுவதுமாக பயன்படுத்தி உள்ளேன்

எவனாவது 118 கோடியை செலவு செய்து விட்டு எம் பிக்கு நிற்பானா? ஏழைகளுக்கு உதவ வேண்டும் அவர்கள் வளர்ச்சியை பெற வேண்டும், அவர்கள் முகத்தில் மகிழ்ச்சியை பார்க்க வேண்டும் என்று தான் நான் வந்திருக்கிறேன்.

ஊழல் செய்பவர்கள் பொய் சொல்லியே நாட்டை ஆண்டு கொண்டிருக்கிறார்கள். பொய்யிலே பிறந்து பொய்யிலே வளர்ந்த புள்ளி ராஜாக்களாக இருக்கிறார்கள். பொய்யையும் ஊழலையும் தவிர எதுவும் தெரியாது அவர்களுக்கு,

நீட் என்று ஒன்று இருக்கு அதை நாங்கள் ஆட்சிக்கு வந்தால் முதல் கையெழுத்திலையே எடுத்து விடுவோம் என்று சொன்னார்கள். தமிழ்நாட்டு மக்களை ஏமாற்றி மூன்று ஆண்டுகளாக ஆட்சியில் இருந்து கொண்டிருக்கிறார்கள்.

ஆட்சிக்கு வந்த உடனே மகளிர் உரிமை தருவதாக தெரிவித்தார்கள் ஆனால் ஆட்சிக்கு வந்து மூன்று வருடங்களுக்கு பிறகு கொடுக்கிறார்கள். மூணு வருஷத்துக்கு 36,000 போச்சு.. முதல்ல 36,000 கொடுத்து விட்டு பிறகு ஆயிரம் ரூபாய் கொடுத்து இருக்க வேண்டும். அதிலும் பாதி பெண்களுக்கு இல்லை என்று தெரிவித்து விட்டார்கள். இதுபோல பொய்க்கு மேல் பொய்..‌ உலக மகா பொய்யர்கள் என பேசிய அவர்களுக்கு வாக்களித்து விடாதீர்கள், தாமரை சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெற செய்ய வேண்டும் என கேட்டு வாக்குகள் சேகரித்தார்.

தேனூர், தொட்டியப்பட்டி, கண்ணப்பாடி, நத்தக்காடு, டி.களத்தூர், எலந்தலப்பட்டி, அடைக்கம்பட்டி, நக்கசேலம், புதுஅம்மாபாளையம், ஈச்சம்பட்டி, சிறுவயலூர், பழைய விராலிப்பட்டி, புதுவிராலிப்பட்டி, குரூர், மங்கூன், செட்டிகுளம், மாவிலங்கை, மலையடிவாரம், நாட்டார்மங்கலம், கூத்தனூர், நாரணமங்கலம், மருதடி, விஜயகோபாலபுரம், ஆலத்தூர்கேட், இரூர், திருவிளக்குறிச்சி, பெருமாள்பாளையம், பாடாலூர், ஆகிய கிராமங்களில் வாக்கு சேகரித்தார்.

சென்ற இடங்களில் எல்லாம் டாக்டர்.பாரிவேந்தருக்கு பெண்கள் ஆராத்தி எடுத்தும், கட்சியினர் மாலை அணிவித்து உற்சாக வரவேற்பு அளித்தனர். ஐஜேகே, பாஜக, அமமுக, தாமக, மக்கள் ராஜ்ஜியம், தமிழர்தேசம், தமமுக உள்ளிட்ட கூட்டணி கட்சியினரும் உடன் சென்றனர்.

அண்மைச் செய்திகள்


Copyright 2015 - © 2024 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!