Don’t waste your vote for DMK: They will create shouting chaos in Parliament: Parivendar speech in campaign!

பெரம்பலூர் எம்.பி வேட்பாளராக பாஜகவின் தாமரை சின்னத்தில் போட்டியிடும் ஐஜேகே நிறுவனர் பாரிவேந்தர் நேற்று திருச்சி மாவட்டம், லால்குடி தொகுதியில் உள்ள புள்ளம்பாடி ஒன்றியத்தில் வாக்குகள் சேகரித்து பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.

ஊட்டத்தூர் கிராமத்தில் நடந்த பிரச்சாரத்தில், உங்கள் ஊருக்கு எனது நிதியில் இருந்து சிமெண்ட சாலை அமைத்து கொடுத்துள்ளேன், நமது பெரம்பலூர் தொகுதியில் பல மருத்துவ உதவிகளும், மாணவர்கள் கல்வி பயில உதவிகள் செய்து அவர்களது வாழ்க்கை செம்மையுற உதவி வருகிறேன்.

அரசின் திட்டங்களை செயல்படுத்த கமிசன் கேட்கப் போவதில்லை, தொடர்ந்து 5 ஆண்டுகளில் நான் தொகுதியில் செய்த சேவையை புத்தகமாக வெளியிட்டுள்ளேன். மேலும், எனது சொந்தப் பணத்தை பல பணிகளுக்கு கொடுத்து உதவி உள்ளேன் என்றும்,

வரும் தேர்தலில் மோடியை தலைமையாக கொண்ட பிஜேபியே அதிக இடங்களை வெல்லும். அதனால், திமுகவிற்கு வாக்களித்து வீணாக்க வேண்டாம். அவர்கள் பாராளுமன்றத்தில் உங்களுக்காக குரல் கொடுக்காமல் கூச்சல் குழப்பத்தை ஏற்படுத்தி வெளிநடப்பிலேய ஈடுபடுவார்கள். அதனால், பாஜகவின் தாமரை சின்னத்தில் போட்டியிடும் எனக்கு, வாக்களிதது என்னை அதிக வாக்குகள் வித்தியாசத்தல் வெற்றி செய்யுங்கள். இன்னும் பல திட்டங்களை உங்களுக்காகவும், உங்கள் தலைமுறைகள் வாழவும் வழிவகை செய்வேன் என பேசினார்.

முன்னதாக வேட்டுகள் (பட்டாசுகள்) முழங்கவும், மேளாதாளத்துடனும், பெண்கள் ஆரத்தி எடுத்து வரவேற்று, வீர திலகமிட்டு அனுப்பினர்.

முதுவத்தூர், கல்லக்குடி, மேலரசூர், ஆமரசூர், கீழரசூர், கல்லகம், சாத்தப்பாடி, ஒரத்தூர் (சிலுவப்பட்டி), கண்ணணூர், மால்வாய், சரடமங்களம், அலந்தலைப்பூர் (கருடமங்கலம்), சிறுகளப்பூர், நல்லூர், தெரணிபாளையம், ஊட்டத்தூர், நம்புக்குறிச்சி, நெய்குளம், நெடுங்கூர், பி.கே. அகரம், ரெட்டிமாங்குடி, குளக்குடி, கண்ணாக்குடி, பெருவளப்பூர், காணக்கிளியநல்லூர், வந்தலை, கூடலூர், சிறுவயலூர், வரகுப்பை, வடுகர்பேட்டை, ஆரோக்கியபுரம், கோவண்டாக்குறிச்சி, புதூர்பாளையம், வாண்ராம் பாளையம், ஆலம்பாக்கம், திண்ணக்குளம், விரகாலூர், ஆலம்பாடிமேட்டூர் பகுதியில் வேட்பாளர் பாரிவேந்தர் தீவிரமாக, சூறாவளி பிரச்சாரம் மேற்கொண்டு வாக்குகளை சேகரித்தார்.

ஐஜேகே தலைவர் ரவி பச்சமுத்து, பொதுச்செயலாளர் ஜெயசீலன், முதன்மை செயலாளர் சத்தியநாதன், அமைப்பு செயலாளர் அன்புதுரை, மாவட்ட தலைவர் செல்வகுமார், பா.ஜ.க மாவட்டத் தலைவர் அஞ்சாநெஞ்சன், புள்ளம்பாடி ஒன்றிய தலைவர்கள் முத்தரசு, செல்வகுமார், தமிழ் மாநில காங்கிரஸ் தியாகராஜன், ராஜமாணிக்கம், அ.ம.மு.க. சவரிமுத்து மற்றும் பலர் உடன் சென்றனர்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News Today - Kalaimalar.

error: Content is protected !!