Door-to-door distribution of booth slips: Perambalur District Election Officer inspection!

பாராளுமன்றப் பொதுத்தேர்தல்-2024 எதிர்வரும் 19.04.2024 அன்று நடைபெறவுள்ளது. 27.03.2024 அன்றைய நிலவரப்படி 25.பெரம்பலூர் பாராளுமன்ற தொகுதியில் 14,46,352 வாக்காளர்கள் இடம் பெற்றுள்ளனர். இதில் 7,01,400 ஆண் வக்காளர்களும், 7,44,807 பெண் வாக்காளர்களும், 145 இதர வாக்காளர்களும் உள்ளனர்.

இதில் 147.பெரம்பலூர்(தனி) சட்டமன்ற தொகுதியில் 1,46,238 ஆண் வக்காளர்களும், 1,54,616 பெண் வாக்காளர்களும் 22 இதர வாக்காளர்களும் என மொத்தம் 3,00,876 வாக்காளர்கள் உள்ளனர். 332 வாக்குச்சாவடி மையங்கள் உள்ளது. 148.குன்னம் சட்டமன்றத் தொகுதியில் 1,35,340 ஆண் வக்காளர்களும், 1,38,423 பெண் வாக்காளர்களும் 1 இதர வாக்காளரும் என மொத்தம் 2,73,764 வாக்காளர்கள் உள்ளனர். 320 வாக்குச்சாவடி மையங்களும் உள்ளன.

18 வயது பூர்த்தியடைந்த வாக்காளர்கள் ஜனநாயகக் கடமையை நிறைவேற்ற வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள், வாக்காளர்களின் வீடுகளுக்குச் சென்று பூத் சிலிப்கள் வழங்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது.

குன்னம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட வரகூர், அந்தூர் பகுதிகளில் வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் வீடு வீடாகச் சென்று பூத் சிலிப்கள் வழங்கும் பணியை பார்வையிட்ட மாவட்ட தேர்தல் அலுவலரும், கலெக்டருமான கற்பகம் வாக்காளர்கள் எவரும் விடுபட்டுவிடாமல் குறித்த காலத்திற்குள் பூத் சிலிப் வழங்கும் பணிகளை முடிக்க வேண்டும் என சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். அப்போது, அரசு பணியாளர்கள் பலர் உடனிருந்தனர்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!