பெரம்பலூரில் நடைபெற்ற விழா ஒன்றில் கலந்து கொண்ட முன்னாள் முதல்வரும், அதிமுக அம்மா அணியை சேர்ந்த பன்னீர் செல்வம் செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்ததாவது:
அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தை வழிநடத்துவதற்கு, கட்சியில் இருக்கின்ற 1.5 கோடி தொண்டர்கள் கழகத்தின் அடிப்படை உறுப்பினர்கள்தான் முடிவு செய்ய வேண்டும் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.
கேள்வி : இரு அணிகளும் இணையுமா
பதில் (ஒ.பன்னீர் செல்வம்) : எங்களுடைய தர்மயுத்தத்தின் நோக்கமே புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர், மாண்புமிகு புரட்சித் தலைவி அம்மா (ஜெயலலிதா) 45 ஆண்டு காலம் இந்த இயக்கத்தினை தொண்டர்கள் இயக்கமாகத்தான் வளர்த்து உருவாக்கி இன்றைக்கு இந்த இயக்கத்தை மாபெரும் இயக்கமாக உருவாக்கி இருக்கிறர்கள்.
அ.இ.அ.தி.மு.க. எந்த ஒரு தனிப்பட்ட குடும்பததினுடைய ஆதிக்கத்தின் கீழ் இருக்க கூடாது என்பதுதான் எங்களுடைய தர்மயுத்தத்தின் அடிப்படை நோக்கம்.
மாண்புமிகு அம்மா (முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா) மரணம், மணரத்தில் இருக்கின்ற மர்ம முடிச்சுகள் அவிழ்க்கப்பட வேண்டும், அதற்கு உரிய நீதி விசாரணை கமிசன் அமைக்கப்பட வேண்டும் என்று தொடர்ந்து நாங்கள் வலியுறுத்தி வருகிறோம்.
இந்த இரண்டு கோரிக்கைகளையும், நிறைவேற்றுகின்ற பட்சத்தில், ஏற்கனவே நாங்கள் சொல்லி இருக்கின்றோம் இணைவதில் எந்த நிபந்தனையும் இல்லை
கேள்வி : எல்லாமே கடைசியில் கை காட்டுவது எடப்பாடி பழனிசாமி, அவர்தான் முடிவு எடுக்க வேண்டும் என கூறிவருகிறீர்களே ஆனால், அவர் தொடர்ச்சியாக மவுனமாக இருக்கிறாரே!
பதில்: அவர் மவுனமாக இருப்பது குறித்து, நீங்கள்தான் (செய்தியாளர்கள்) கேள்வி கேட்க வேண்டும்.
கேள்வி: டி.டிவி தினகரனை பொதுச்செயலாளர்தான நீக்க வேண்டும் என்று கூறுகிறாரே !
பதில் : அ.தி.மு.க பொதுச் செயலாளரை தேர்வு முறைகளை நடைமுறை படுத்திதான், கழகத்தின் பொதுச்செயலாளரை தேர்வு செய்ய வேண்டும் என்று கழக சட்ட விதி கூறுகிறது.
ஆக, திருமதி சசிகலாவை அவர்களை கழகத்தின் பொதுச் செயலாளர் தேர்ந்தெடுத்த முறையே தவறு என்பதுதான் எங்களுடைய கருத்து, இதையே இந்திய தேர்தல் ஆணையத்திடம் வலுவான கருத்தை அங்கே தெரிவித்துள்ளோம். அவர்களும் உரிய விசாரணை செய்து கொண்டிருக்கிறார்கள்.
கேள்வி : இரட்டை சிலை சின்னம் பெறுவது குறித்த கேள்விக்கு,
பதில் : ஒவ்வொரு பிரச்சனையாக தேர்தல் ஆணைத்திடம் நாங்கள் உரிய முறைப்படி விசாரித்து , உரிய ஆவணங்கள் படி முடிவு எடுக்க வேண்டும் என்று வாதத்தை தந்திருக்கிறோம். உறுதியாக எங்களுக்கு சாதகமான சூழ்நிலை வரும்.
உண்மையான அணைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் நாங்கள்தான், இரட்டை சிலை சின்னம் எங்களுக்தான் கிடைக்கும் என்ற நம்பிக்கை இருக்கிறது என ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்தார். அப்போது பெரம்பலூரை சேர்ந்த அதிமுக அம்மா அணி நிர்வாகிகள் உடன் இருந்தனர்.