Double life sentence for sexual harassment for 2 girls: Namakkal court
இரண்டு சிறுமிகளுக்கு பாலியல் தொந்தரவு அளித்ததாகத் தொடரப்பட்ட வழக்கில், இளைஞருக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதித்து நாமக்கல் கோர்ட்டில் தீர்ப்பு வழங்கப்பட்டது.
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அருகேயுள்ள காடச்சநல்லூரைச் சேர்ந்தவர் ஆனந்த்(28). இவர் 2016 ஆம் ஆண்டு மே 30-ஆம் தேதி அதே பகுதியைச் சேர்ந்த 10, 12 வயதுடைய இரு சிறுமிகளுக்கு பாலியல் தொந்தரவு அளித்ததாக கூறப்படுகிறது.
இதுதொடர்பான புகாரின்பேரில், திருச்செங்கோடு அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார், போக்சோ சட்டத்தின்கீழ் வழக்குப் பதிவு செய்து ஆனந்தை கைது செய்து நாமக்கல் மகளிர் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி இளங்கோ தீர்ப்பளித்தார். அதில் குற்றம் சுமத்தப்பட்ட ஆனந்த்துக்கு இரட்டை ஆயுள் தண்டனையும், ரூ.6 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி உத்தரவிட்டார்.