Doubt about love near Perambalur: minor girl commits suicide! The lover also dies!
பெரம்பலூர் அருகே 11ம் வகுப்பு படிக்கும் பள்ளி மாணவி ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் நேற்று வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
போலீசார் நடத்திய முதல் கட்ட விசாரணையில், இறந்து போன பள்ளி மாணவிக்கும், அரியலூர் மாவட்டம் மேலப்பழுவூர் கிராமத்தைச் சேர்ந்த சரவணன் மகன் சஞ்சய் ரோசனுக்கும் காதல் ஏற்பட்டுள்ளது. சஞ்சய் ரோசன் பெரம்பலூர் எளம்பலூர் சாலையில் உள்ள ரெங்கா நகரில் வசித்து வந்த நிலையில் சென்னை சென்றுள்ளார்.
இதில் காதலி மீது சந்தேகத்தால் போனில் வாக்குவாதம் செய்து உள்ளனர். இதனால் மாணவி வீட்டில் யாரும் இல்லாத போது மின்விசிறியில் தூக்கு மாட்டி நேற்று முன்தினம் இறந்தது தெரியவந்தது. மேலும், சென்னையில் இருந்த சஞ்சய் ரோசனும் காதலி இறந்த துக்கம் தாளாமல் நேற்று சென்னையில் தற்கொலை செய்து கொண்டார். இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள்.
காதலில் ஏற்பட்ட விபரீத சந்தேகத்தால் இரண்டு பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.