Dow Agro Sciences has provided security apparatus for pesticides to 300 farmers.

பாதுகாப்பான முறையில் பயிர்களுக்கு பூச்சிக் கொல்லி மருந்துகள் தெளிக்கும் வகையில் 300 விவசாயிகளுக்கு ரூ. 2,50,000 மதிப்புள்ள பாதுகாப்பு உடைகள் மற்றும் உபகரணங்களை டவ் அக்ரோ சயின்சஸ் நிறுவனம் சுமார் வழங்கியது.

பாதுகாப்பற்ற முறையில் பருத்தி உள்ளிட்ட சில பயிர்களுக்கு விவசாயிகள் பயிர்களுக்கு பூச்சி மருந்து தெளித்த விவசாயிகள் உயிரிழந்தனர்.

அதனால் வேளாண் துறை சார்பில் பாதுகாப்பான முறைகளைக் கையாள வேண்டும் என்று தொடர்ந்து அறிவுறுத்தப்பட்டு வருகின்றது. மேலும், பருத்தி உள்ளிட்ட பயிர்களில் பாதுகாப்பான முறையில் மருந்து தெளிப்பது குறித்த விவசாயிகளுக்கான விழிப்புணர்வு முகாம் பெரம்பலூரில் நடைபெற்றது.

மாவட்ட வேளாண்மைத் துறையின் முயற்சியால் தனியார் நிறுவனமான டவ் அக்ரோ சயின்சஸ் நிறுவனத்தின் ஒத்துழைப்புடன் பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்த 300 விவசாயிகளுக்கு பூச்சி மருந்து தெளிக்கும்போது அணிந்து கொள்வதற்கான உடைகள் மற்றும் உபகரணங்களை மாவட்ட ஆட்சியர் வே.சாந்தா வழங்கினார்.

இந்த பாதுகாப்பு உபகரணத்தில் பூச்சி மருந்து அடிக்கும்போது பாதுகாப்பாக இருக்கும் வகையில், சுவாசத்தின் வழியாக பூச்சி மருந்தின் வீரியம் தாக்காத வகையில் முகமூடி, கண் கண்ணாடி, தொப்பி, கையுறைகள் மற்றும் பூச்சி மருந்து கலந்த இயந்திரத்தை முதுகில் அணியும்பொழுது மருந்து கசிந்து உடைக்குள் ஊடுருவா வகையில் பிரத்தியேகமாக தயாரிக்கப்பட்ட சட்டை, பேண்ட் உள்ளிட்டவை இந்த உபகரணத்தில் இடம் பெற்றிருந்தன.

இந்த விழிப்புணர்வு முகாமில் பாதுகாப்பான முறையில் வயல்வெளிகளில் மருந்து தெளிப்பது குறித்தும், மருந்து தெளிக்கும்போது விவசாயிகள் கடைபிடிக்க வேண்டிய பாதுகாப்பு நடைமுறைகள் குறித்தும், இக்கூட்டத்தின் வாயிலாக விவசாயிகளுக்கு விரிவாக எடுத்துரைக்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் வேளாண்மைத்துறை அலுவலர்கள் விவசாயிகள் பலர் கலந்து கொண்டனர்.

அண்மைச் செய்திகள்


Copyright 2015 - © 2024 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!