Dr. T. Devanathan Yadav strongly condemns the action of the Charity Department which is trying to capture the Ayodhya Hall!

வின் தொலைக்காட்சி அதிபரும், இந்திய மக்கள் கல்வி கழகத்தின் நிறுவனத் தலைவருமான முனைவர் தி.தேவநாதன் யாதவ் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:

சென்னையின் அடையாளங்களுள் ஒன்றாக திகழும் அயோத்யா மண்டபம் இந்துக்களின் புனித தலமாகவும் உள்ளது. இந்த பழமையான பஜனை மடம் வெறும் செங்கற்கலாலும் சிமெண்ட்களாலும் கட்டப்பட்டது அல்ல, மாறாக அப்பகுதி மக்களின் உணர்வாலும் பக்தியாலும் எழுப்பப்பட்டது. ஸ்ரீ ராம சமாஜ் எனும் ஆன்மீக அமைப்பின் மூலம் அயோத்யா மண்டபம் சிறப்பாக செயல்பட்டு வருகிறது.

மடத்திற்கு அதிகளவில் பக்தர்கள் வருவதை கண்டு, பொறுத்துக்கொள்ள முடியாத தமிழக அரசின் இந்து சமய அறநிலையத்துறை அதை எப்படியாவது கைப்பற்றிட வேண்டும் என துடிப்பது கடும் கண்டனத்திற்குரியது. நீதிமன்றத்தில் மடத்திற்கு எதிராக தீர்ப்பு வந்த போதிலும் அதனை எதிர்த்து இந்து மத பற்றாளர்கள் சட்டப்போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் அயோத்யா மண்டபத்தை பொதுமக்களின் எதிர்ப்பையும் மீறி கைப்பற்ற முயன்று மண்டபத்தின் கதவை அதிகாரிகள் உடைத்திருக்கிறார்கள். அரசின் இந்த செயல் கடும் கண்டனத்திற்குரியது. அதுமட்டுமல்லாமல், இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள பல கோவில்களின் நிலையே இன்னும் கேள்விக்குறியாக உள்ளது.

அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களின் மோசமான நிலையை அறிந்து தான் இந்து மத பற்றாளர்கள் இதை எதிர்க்கிறோம். பெரும்பாலான மக்களின் கோரிக்கைக்கு செவி சாய்த்து அயோத்யா மண்டபத்தை கைப்பற்றும் முயற்சியை அரசு கைவிட வேண்டும். அயோத்தியை மீட்க தெரிந்த எங்களுக்கு அயோத்யா மண்டபத்தை மீட்க தெரியாதா ? ’’ என குறிப்பிட்டுள்ளார்.

———————————————————————————————————–

புதிய இணையதளம் தொடங்க விரும்புவரா! அதற்கான #Server, #Domain Name வேண்டுமா? க்ளிக் செய்யுங்கள்.. https://www.cyberhost.in/clients/aff.php?aff=249


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!