Dravidian party are the ones who taught corruption; IJK candidate parivendar in the meeting of Perambalur activists!
ஊழலை கற்றுக் கொடுத்தவர்கள் திராவிட கட்சியினர்தான் எனவும் தேசப்பற்றையும் நாட்டுப் பற்றையும் தமிழ் பற்றையும் அவர்கள் சொல்லிக் கொடுக்கவில்லை எனவே இது போன்றவர்களை புறம் தள்ளி விட்டு தாமரை சின்னத்தில் வாக்களித்து என்னை வெற்றி பெற செய்தால் பெரம்பலூருக்கு ரயில்வே திட்டம் சின்ன வெங்காயத்திற்கு மதிப்பு கூட்டப்பட்ட பொருட்கள் தயாரிப்பு திட்டம் போன்ற திட்டங்களை நிறைவேற்றுவேன் என பெரம்பலூரில் நடைபெற்ற தேசிய ஜனநாயகக் கூட்டணி செயல்வீரர்கள் கூட்டத்தில் இந்திய ஜனநாயக கட்சியின் நிறுவனத் தலைவர் பாரிவேந்தர் தெரிவித்தார்.
பெரம்பலூரில் தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம் பெற்றுள்ள கட்சிகளின் செயல்வீரர்கள்ட் சட்ட கூட்டம் இன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் இக்கூட்டனியில் இடம்பெற்றுள்ள இந்திய ஜனநாயக கட்சியின் பெரம்பலூர் பாராளுமன்ற தொகுதி வேட்பாளர் பாரிவேந்தர் கலந்து கொண்டு பேசினார்.அப்போது பேசிய அவர் தமிழ்நாட்டில் தேசப்பற்று, நாட்டுப்பற்று தமிழ் பற்று குறைவதற்கான காரணம் திராவிட கட்சியினர்தான் எனவும் இவர்களால்தான் தமிழ் நாட்டிற்கும் இழப்பு என தெரிவித்தார். நம் நாட்டிற்கு மோடி அவர்களால் உலக அளவில் பெருமை, நாமும் நமது நாடும்,
தலை நிமிர்ந்து நிற்க காரணம். பிரதமர் மோடி அவர்கள்தான்.
இந்த தேர்தல் இந்திய நாட்டிற்கு முக்கியமான தேர்தல், நல்லவரை நம்முடைய பாராளுமன்ற உறுப்பினராக அனுப்ப தவறினால் இழப்பு மோடிக்கு அல்ல, நமக்கும் நமது நாட்டுக்கும் தான், நாம் இது விழித்துக் கொள்ள வேண்டிய நேரம் என தெரிவித்தார்.நான் பெரம்பலூர் தொகுதியில் வெற்றி பெற்றால், சின்ன வெங்காயம் மதிப்பு கூட்டு பொருளாக மாற்றுவதற்கு அத்துறை அமைச்சரை பார்த்து பேசி அதற்கான திட்டத்தை கொண்டு வருவேன் எனவும் பாதி பணிகள் முடிந்து விட்ட நிலையில் உள்ள அரியலூர் பெரம்பலூர் நாமக்கல் ரயில் பாதை திட்டத்தினை கண்டிப்பாக நிறைவேற்றித் தருவேன் எனவும் கூறினார்.
ஒட்டுக்கு பணம் கொடுக்கும் பாவச் செயலை கற்று கொடுத்தவர்கள் திராவிடத் திருவாளர்கள்தான் எனவும் எந்த காரணத்தை கொண்டும், அவர்கள் ஓட்டுக்கு கொடுக்கும் பணத்தை வாங்க கூடாது எனவும் அவர்கள் பணத்தை கொடுத்துவிட்டு ஆட்சிக்கு வந்தவுடன் மிகப் பெரிய அளவில் ஊழல் செய்வார்கள் மீண்டும் தேர்தலின்போது பணம் கொடுப்பார்கள் பிறகு ஊழல் செய்வார்கள் இதுதான் அவர்களின் முழு திறமை. நீங்கள் சிந்தித்து வாக்களிக்க வேண்டும். நல்லவர்களுக்கு வாக்களிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். இந்த கூட்டத்தில் அக்கட்சியின் நிர்வாகிகள் மற்றும் தோழமைக் கட்சிகளான ஓபிஎஸ் அணியை சேர்ந்த முன்னாள் எம்.எல்.ஏ ஆர்.டிராமச்சந்திரன், பாமக மாவட்ட செயலாளர் செந்தில்குமார், பாஜக மாவட்ட தலைவர் செல்வராஜ், அமமுக, தமமுக மற்றும் ஐஜேகே மாநில மாவட்ட நிர்வாகிகள் தொண்டர்கள் என பலர் கலந்து கொண்டனர்.