Driver killed in a road accident near Namakkal
நாமக்கல் அருகே நடைபெற்ற சாலை விபத்தில் இருசக்க வாகனத்தில் சென்ற லாரி டிரைவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
நாமக்கல் மாவட்டம் மோகனூர் அடுத்துள்ள பரளி பஞ்சாயத்து நல்லையம்பட்டி பகுதியை சேர்ந்தவர் சின்னுசாமி (58). லாரி டிரைவர். இவர் சம்பவத்தன்று இரவு 7 மணிக்கு, வளையபட்டி அருகே தனது இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே வந்த லாரி இருசக்கர வாகனத்தில் மோதியது.
இதில் சின்னுசாமி படுகாயம் அடைந்தார். அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு நாமக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் சின்னுசாமி ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இச்சம்பவம் குறித்து சின்னுசாமியின் மனைவி சரோஜா(55) மோகனூர் போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.