Drunk Controversy: Chicken shopkeeper arrested for killing elderly man
பெரம்பலூர் மாவட்டம், செட்டிக்குளத் சேர்ந்தவர் தர்மலிங்கம் மகன் நாகப்பன் (45), இவர் செட்டிகுளம் வெங்காய குடோன் அருகில் உள்ள சிமெண்ட் குடோன் தாழ்வாரப் பகுதியில் சில்லிசிக்கன் கடை நடத்தி வருகிறார்.
அதே பகுதியில் ஆதவரற்ற, பக்கவாதத்தால் பாதிக்கபட்பட மணி (75), என்பவரும் அதே பகுதியில் தங்கி உள்ளார். வழக்கம் போல், நேற்றிரவு, முதியவருக்கும், குடிபோதையில் இருந்த நாகப்பனுக்கும் ஏற்பட்ட பிரச்சனையில், நாகப்பன் கத்தியால் முதியவரை கத்தியால் வெட்டியதில், முதியவர் மணி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இது குறித்து தகவல் அறிந்த பாடாலூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, மணியின் உடலை கைப்பற்றி, உடற்கூறு ஆய்விற்காக பெரம்பலூர் அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கொலை செய்த நாகப்பனை கைது செய்த போலீசார், விசாரணை நடத்தி வருகின்றனர்.