Drunk on the ground bridge, corpse rescued in the middle river!
பெரம்பலூர் – கடலூர் மாவட்ட எல்லையில் ஓடும் வெள்ளாற்றில், போதையில் தவறி விழுந்தவர் சடலமாக மீட்கப்பட்டார்.
கடலூர் மாவட்டம், திட்டக்குடி பொன்னுசாமி நகரில் வசிப்பவர் மனோகர் என்பவரின் மகன் பிரபு (28), எலெக்ட்ரிசியனாக பணி புரிந்து வருகிறார். இவர் நேற்றிரவு சொந்த அலுவல் காரணமாக அகரம்சிகூர் பார்டர் சென்றுவிட்டு தனது வீட்டிற்கு தரைப்பாலத்தில் வெள்ளாற்றின் ஓரமாக நடந்து வந்து கொண்டிருந்தார். அப்போது தரைப்பாலத்தில் மது அருந்தி உள்ளார். நிதானம் இழந்து வெள்ளாற்று தண்ணீரில் விழுந்தார். இதில் பிரபு தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டார். தகவலின் பேரில் திட்டக்குடி தீயணைப்பு துறை நிலைய அலுவலர் வசந்தராஜன் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் தேடி பார்த்தனர் கிடைக்கவில்லை. இந்நிலையில் இன்று காலை 7 மணி அளவில் வதிஷ்டபுரம் தனியார் மண்டபம் அருகே வெள்ளாற்றில் இறந்து கிடந்தார். அவ்வழியாக சென்றவர்கள் அகரம்சீகூர் புறக்காவல் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் போலீசார் சம்பவயிடத்திற்கு சென்று உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து குன்னம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.