DSP presented the prize to the winners of sports tournaments

மாதாந்திர விளையாட்டுப்போட்டிகளில் வெற்றிபெற்ற வீரர்களுக்கு டி.எஸ்பி கார்த்திக் பதக்கங்களையும், சான்றிதழ்களையும் வழங்கினார்.

மார்ச் மாதத்திற்கான மாதாந்திர விளையாட்டுப் போட்டிகள் இருபாலாருக்கும் பெரம்பலூர் மாவட்ட விளையாட்டு அரங்கில் இன்று நடத்தப்பட்டது. இதில் தடகளம், நீச்சல் மற்றும் குழுப்போட்டிகளான இறகுப்பந்து டேக்வாண்டோ ஆகிய விளையாட்டுக்களில் போட்டிகள் நடத்தப்பட்டது. இப்போட்டிகளில் 15 பள்ளிகள், 7 கல்லூரிகளைச் சார்ந்த ஆண்கள் மற்றும் பெண்கள் மற்றும் பொதுமக்கள் என ஆண்கள் 170 நபர்களும் பெண்களில் 160 நபர்களும் கலந்து கொண்டனர்.

ஆண்களுக்கான தடகளப்போட்டியில் 100 மீ ஓட்டப்போட்டியில் கேந்தீரீய வித்யாலயாவைச் சேர்ந்த சி.ஆர்.விபின்ராஜ் முதலிடத்தையும், 400 மீ ஓட்டப்போட்டியில் தனலட்சுமி சீனிவாசன் பாலிடெக்னிக் கல்லுhரியைச் சேர்ந்த எஸ்.அசோந்த் -முதலிடத்தையும், நீளம் தாண்டுதல் போட்டியில் சீனிவாசன் கல்லூரியைச் சேர்ந்த ஆர்.அகிலன் முதலிடத்தையும்,

உயரம் தாண்டுதல் போட்டியில் புனித ஜோசப் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியைச் சார்ந்த டி. நிர்மல்ராஜ், முதலிடத்தையும், ஈட்டி எறிதல் போட்டியில்; பெரம்பலூர் மின்வாரியத்தைச் சேர்ந்த, ஆர்.பிரகாஷ், என்பவர் முதலிடத்தையும், வட்டு எறிதல் போட்டியில தனலட்சுமி சீனிவாசன் பாலிடெக்னிக் கல்லூரியைச் சேர்ந்த எஸ்.ஆனந்த ராஜ் முதலிடத்தையும், 1500 மீ ஓட்டப் பந்தயப் போட்டியில் பொம்மனப்பாடியைச் சேர்ந்த அ.மாரிமுத்து முதலிடத்தையும் பெற்றனர்.

பெண்களுக்கான தடகளப்போட்டியில் புனித தோமினிக் பெண்கள் மேல்நிலைப்பள்ளியைச் சேர்ந்த மாணவிகளான பி.பிரியதர்ஸினி 100மீ ஓட்டப் பந்தயப் போட்டியில் முதலிடத்தையும், 400மீ, ஓட்டப் போட்டியில் ஒய்.டெல்சி முதலிடத்தையும், உயரம் தாண்டுதல் போட்டியில் என்.நாகப்பிரியா, முதலிடத்தையும், வட்டு எறிதல், போட்டியில் எஸ்.கார்குழலி முதலிடத்தையும், ஈட்டி எறிதல் போட்டியில் மற்றும் நீளம் தாண்டுதல் போட்டியில் என்.நாகப்பிரியா முதலிடத்தையும், 1500மீ ஓட்டப்பந்தயப் போட்டியில் எம்.தன்யா ஆகியோர் முதலிடத்தைப் பெற்றனர்.

ஆண்களுக்கான டேக்வாண்டோ போட்டியில 23 கிலோ எடைப்பிhpவில் ஜி.அஸ்வந்த் முதலிடத்தையும், 25 கிலோ எடைப்பிhpவில் எம்.நிரஞ்சன் முதலிடத்தையும், 27 கிலோ எடைப்பிhpவில் ஆh;.மணிகண்டன் முதலிடத்தையும், 30 கிலோ எடைப்பிhpவில் எஸ்.பிரபு முதலிடத்தையும், 35 கிலோ எடைப்பிhpவில் வி.அச்சுதன் முதலிடத்தையும்,35 கிலோவிற்கு மேல் உள்ளவர;களுக்கான எடைப்பிhpவில் கே.மணிரத்தினம் முதலிடத்தையும், 48 கிலோ எடைப்பிhpவில் எப்.வின்சென்ட்பொ;னான்டோ முதலிடத்தையும், 54 கிலோ எடைப்பிhpவில் வி.இராமஜெயம் முதலிடத்தையும், 60 கிலோ எடைப்பிhpவில் கே.எஸ்.விக்னேஸ்வரன் முதலிடத்தையும் 70 கிலோ எடைப்பிhpவில் பி.தேவநாதன் முதலிடத்தையும் பெற்றனா;.

பெண்களுக்கான டேக்வாண்டோ போட்டியில் 45 கிலோ எடைப்பிரிவில் இ.இளவரசி முதலிடத்தையும், 60 கிலோ எடைப்பிரிவில் எஸ்.ஸ்ரீநிதி முதலிடத்தையும், 41 கிலோ எடைப்பிரிவில் இ.சிந்துஜா முதலிடத்தையும், 44 கிலோ எடைப்பிரிவில் பி.யோகலட்சுமி முதலிடத்தையும், 25 கிலோ எடைப்பிரிவில் வி.பிரகஸ்னி முதலிடத்தையும், வயது வரம்பற்ற பிரிவில் 35 கிலோ எடைப்பிரிவில் ஜே.ஜெயபியூலா ஸெரீன் முதலிடத்தையும், வயது வரம்பற்ற பிரிவில் 38 கிலோ எடைப் பிரிவில் ஜே.கே.செந்தமிழ் முதலிடத்தையும் பெற்றனர்.

பின்னர் மாலை 5.00 மணியளவில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் வெற்றி பெற்ற வீரர், வீராங்கனைகளுக்கு பெரம்பலூர் மாவட்ட துணை காவல் கண்காணிப்பாளர் ஏ.கார்த்திக் பதக்கங்களையும், சான்றிதழ்களையும் வழங்கினார். முன்னதாக தடகளப் பயிற்றுநர் க.கோகிலா வரவேற்புரை நிகழ்த்தினார்.

உடற்கல்வி ஆசிரியர்கள் பலர் கலந்து கொண்டனர். மாணவ, மாணவியர்கள், பொதுமக்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர். நிறைவில் நீச்சல் பயிற்றுநர் ந. அன்பரசு நன்றி கூறினார்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!