Due to an accident near Perambalur, Gutka smugglers fled after leaving the car in the middle of the road!
பெரம்பலூர் அருகே உள்ள சிறுவாச்சூரில் , இன்று அதிகாலை சுமார் 5 மணி அளவில் சென்னையிலிருந்து திருச்சி சென்ற அரசு பேருந்தின் பின்புறம் கார் ஒன்று மோதி விபத்துக்குள்ளானது, அதில் வந்த மர்ம நபர்கள் இருவர் காரை அங்கேயே விட்டு விட்டு தப்பி ஓடி தலைமறைவாகி விட்டனர். இதில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.
சம்பவ இடத்திற்கு ஹைவே பேட்ரோல் போலீசார் காரை சோதித்த போது காரில் சுமார் 500 கிலோ குட்கா பொருட்கள் கடத்தி வரப்பட்டது தெரியவந்தது. அந்த காரை கைப்பற்றிய வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், தனிப்படை அவர்களை கைது செய்ய விரைந்துள்ளது. இன்று மாலைக்குள் கைதாவார்கள் என போலீஸ் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.