Due to the quarries, the underground water level, agriculture has gone! People appeal to Perambalur Collector in Gram Sabha meeting!!

பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் வட்டம், பாடாலூர் ஊராட்சிக்கு உட்பட்ட திருவளக்குறிச்சி கிராமத்தில் இன்று சுதந்திர தினத்தை முன்னிட்டு, கிராம சபைக் கூட்டம், தலைவர் நாகஜோதி தலைமையில் நடந்தது. கூட்டத்தில் பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் கற்பகம், பெரம்பலூர் எம்.எல்.ஏ பிரபாகரன் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில், தெரிவித்த கருத்துக்களாவன:

கிராம கூட்டம் குறித்து முறையாக 8 நாட்களுக்கு முன்பாக தெரிவிக்கப்படவில்லை, மேலும், 32 பதிவேடுகள் பார்வைக்கு வைக்கப்பட வேண்டும் என்ற விதிமுறைகளை பின்பற்றப்படவில்லை என்றும், குவாரிகளால் நிலத்தடி நீர் மட்டம் நாளுக்கு நாள் பாதாளத்தை நோக்கி செல்வதால் குடிநீர் மற்றும் விவசாயத்திற்கு இல்லாமல் வயல் காய்ந்து கருகி வருகின்றன. அதனால், குவாரிகளை தடுத்து நிறுத்தவும்,

முறையாக ஆர்.ஓ பிளான்ட் அமைத்து குடிநீர் செய்ய வேண்டும், மேல்நிலை நீர்தேக்கத் தொட்டியில் இருந்து வரும் நீரில் புழுக்கள் வருவதாகவும், தெரிவித்தனர்.

அருகில் ராஜாமலை கிராமத்திற்கு மின்சாரம், சாலை உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து தரக்கோரினர்.

இது குறித்து பொதுமக்களிடம் பேசிய கலெக்டர் கற்பகம், உங்கள் நியாயமான கோரிக்கைகள் நிறைவேற்றித் தரப்படும். எங்களிடம் நீங்கள் கோபமாக பேசுவதால், நாங்களும் கோபமாக பேசமாட்டோம். உங்கள் ஊருக்கு கிராம சபை கூட்டத்திற்கு வந்த காரணமே உங்களுக்கு தண்ணீர் உள்ளிட்ட அடிப்படை பிரச்சனைகளை தீர்க்க தேர்வு செய்து உள்ளோம். நாங்கள் உங்களுக்கும், அரசாங்கத்திற்கும் பணிபுரிய வேலைக்கு வந்து உள்ளோம் என தெரிவித்தார். 18 வயது நிரம்பிய அனைவரும் கிராம சபை கூட்டத்தின் உறுப்பினர்கள். உரிமையை கேட்கும் நீங்கள் கடமையை ஆற்றவேண்டும் என பேசினார்.

முன்னதாக எம்.எல்.ஏ பிரபாகரன் பேசிய போது: மாவட்ட ஆட்சித் தலைவர் நல்ல நோக்கத்தோடு, உங்கள் ஊருக்கு வந்துள்ளார். அவர் நீங்கள் விடுத்த பல்வேறு கோரிக்கைகளை செயல்படுத்துவார், பொதுமக்கள் நல்ல ஒத்துழைப்பு தாருங்கள் என பேசினார். இதில், மாவட்ட கவுன்சிலர் சோமு.மதியகழன் உள்ளிட்ட உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் அனைத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

அண்மைச் செய்திகள்


Copyright 2015 - © 2024 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!