DYFI Signature Drive Against Addiction in Perambalur: State Secretary Dr. Karunakaran Inaugurated!
பெரம்பலூர் புதிய பேருந்து நிலையத்தில், போதைக்கு எதிராக இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் மாவட்டத் தலைவர் சரவணகன் தலைமையில் ஒரு கோடி கையெழுத்து இயக்கம், போதையில்லா தமிழகத்தை உருவாக்கிடவும், மாணவர்கள் இளைஞர்களை காத்திட வும் ஒருகோடி கையெழுத்து இயக் கம் மாநிலம் முழு வதும் பல்வேறு, மாவட்டத் தில் தொடங்கியது.
மக்களுக்கான மருத்துவ கழக, மாநில செயலாளர் டாக்டர்.கருணாகரன் முதல் கையெழுத்திட்டு தொடங்கி வைத்தார். அதனைத்தொடர்ந்து சங்க நிர்வாகிகள், உறுப்பினர்கள், பொதுமக்கள், பலர் கையெழுத்திட்டனர். பின்னர், பொதுமக்களுக்கு போதை விழிப்புணர்வு துண்டு பிரசுங்களை வழங்கினர்.
தடை செய்யப்பட்ட போதைப் பொருட்களை பெரம்பலூர் மாவட்டத்தில் கட்டுப்படுத்திட மாவட்ட காவல்து றை முழு வீச்சில் செயல்படவலியுறுத்தியும், பெரம்ப லூர் மாவட் டத்தில் போதை க்கு எதிராக ஒரு லட்சம் கையெழுத்துக்களை பெற்று பிப்ரவரி 21ம் அன்று கலெக்டரிடம் மனு அளித்து, அதன் நகலை தமிழக முதல்வருக்கு வழங்கப் போதாக தெரிவித்தனர்.
பெரம்பலூர் மாவட்ட கம்யூனிஸ் கட்சியின் மாவட்ட இந்திய ஜன நாயக வாலிபர் சங்க மாவட்ட செயலாளர் சக்திவேல், மாவட்ட பொருளாளர் அறிவழகன், மாவட்ட துணைச்செயலாளர் வேல்முரு கன், மாவட்ட செயற்குழு பிரியா, மாவட்ட துணைத் தலைவர் ராமு, மாவட்ட செயற்குழு மற்றும் மாவட்ட குழு உறுப்பினர்கள் சடை யப்பன், அருண் ஒன்றிய குழு உறுப்பி னர்கள் மணிகண்டன் காசிராஜன், ரவிச்சந்திரன், கார்த்திக் ராஜா உள்ளிட்ட நிர்வாகிகள் உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.