E-service plan, the Perambalur grant certificates to the District Revenue Department Training Classes

symbleபெரம்பலூர் மாவட்ட ஆட்சிப் பணியாளர் அலுவலக வளாகத்தில் இ-சேவை திட்டம் மூலமாக வருவாய்த்துறை சார்ந்த கூடுதல் சான்றிதழ்கள் வழங்குவது தொடர்பான பயிற்சி வகுப்புகளை மாவட்ட வருவாய் அலுவலர்(பொ) துரை இன்று (15.10.16) தொடங்கி வைத்தார்.

பெரம்பலூர் மாவட்டத்தில் வருவாய்த்துறை சார்பில் வழங்கப்படும் சான்றிதழ்கள் பொதுமக்களின் வசதிக்காக புதுவாழ்வு திட்டம் மூலமாக அனைத்து ஊராட்சிகளிலும், அரசு கேபிள் டிவி மூலமாக அனைத்து வட்டாட்சியர் அலுவலகங்களிலும், தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகள், மகளிர் திட்டம், எல்காட் நிறுவனங்கள் மூலமாக மொத்தம் மாவட்டம் முழுவதும் 183 மையங்களில் செயல்பட்டு வரும் பொதுசேவை மையங்கள் மூலமாக வழங்கப்பட்டு வருகின்றன.

இந்த பொது சேவை மையங்கள் மூலமாக இது வரை சாதிச்சான்று, இருப்பிடசான்று, வருமனச்சான்று, முதல் பட்டதாரிக்கான சான்று உள்ளிட்ட 6 விதமான வருவாய்த்துறையின் சான்றிதழ்கள் வழங்கப்பட்டு வந்தன. பொது மக்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்ற இத்திட்டத்தில் மேலும் விதவை சான்று, கலப்பு திருமணச்சான்று, வாரிசுசான்று, விவசாய வருமானச்சான்று உள்ளிட்ட மேலும் 14 வகையான சான்றிதழ்கள் தற்சமயம் வழங்கப்பட்டு வருகின்றன.

இச்சான்றிதழ்கள் வழங்குவது தொடர்பாக குன்னம் வட்டத்திற்கு உட்ப்பட்ட வருவாய் ஆய்வாளர்கள், கிராம நிர்வாக அலுவலர்களுக்கான பயற்சி வகுப்பை மாவட்ட வருவாய் அலுவலர்(பொ) துரை இன்று துவைக்கி வைத்தார்.

இப்பயிற்சி வகுப்பில் வருவாய்த்துறை சேர்ந்த சான்றிதழ்கள் பொதுசேவை மையத்தின் மூலமாக வழங்குவது குறித்து மின்னணு மாவட்ட மேலாளர் மு.ராஜ்குமார் மூலம் குன்னம் வட்டத்திற்கு உட்ப்பட்ட வருவாய் ஆய்வாளர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள் என மொத்தம் 30 நபர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் வட்டாட்சியர் தமிழரசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!