01-election-commission-of-indiaபெரம்பலூர் : ஜனநாயக ரீதியாக வாக்களித்து மக்கள் பிரதிநிதிகள் தேர்ந்தெடுப்பதற்கே தேர்தல் நடத்தப்பபடுகிறது. ஆனால், இந்த தேர்தலில் பல கட்டுப்பாடுகளை விதித்து உள்ளது. அதனை நடைமுறைப்படுத்தில் பெரும் சவால்களை சந்தித்து வருகிறது. ஆனால், பெரம்பலூர் மாவட்டத்தில் அனைத்து கட்சிகளும் போட்டி போட்டுக் கொண்டு வெற்றி ஒன்றையே இலக்காக வைத்து பணத்தை வாரி வழங்கி வருகின்றன.

தூங்குபவரைஎழுப்பலாம்! தூங்குவது போல் நடிப்பவரை எழுப்ப முடியாது.

இந்த பழமொழியை போன்று தேர்தல் அலுவலர்கள் பணம் பட்டுவாடா நடப்பதும் தெரிந்தும், நமக்கு ஏன் வம்பு என கண்டும் காணமல் விட்டுவிடுகின்றனர். இவர்களுக்கு ஆயிரகணக்கில் சம்பளம், போலீஸ் பாதுகாப்பு, வாகன வசதி உள்ளிட்ட பல்வேறு வசதிகள் செய்யப்பட்டும் கையாலாக தனத்தால் அரசியல் கட்சிகள் வெற்றி பெற்றால் என்ன தோற்றால் என்ன நமக்கு சம்பளம் என்பது போல் செயல்பட்டு வருகின்றனர்.

ஆட்சிக்கு வரும் போது பணிமாற்றம், பல்வேறு தொந்தரவுகள் கொடுப்பார்கள் என்றும், பணிபாதுகாப்பை கருதியும் பெரும்பாலான அலுவர்கள் தேர்தல் விதிமுறைகளை கண்டும் காணமல் விட்டு வருகின்றனர். இதில் கட்சி விசுவாசிகளும் அடங்குவர்.

பெரம்பலூர் மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான நந்தகுமாரை தொடர்பு கொள்வதில் சிரமம் உள்ளது. முந்தைய ஆட்சியர்கள் போன்று குறை நிறை எவரும் தெரிவிக்க முடிவதில்லை.

அனைத்து அரசியல் கட்யினரும் பணத்தை பதுக்கி வைத்துள்ளனர். வாக்குப் பதிவு நாள் ஓரிரு நாட்களுக்கு முன்பு, வீடுமாக ஓட்டுக்கு ஆயிரம் முதல் 5 ஆயிரம் செய்ய திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன.

முன்னேற்பாடும், முறையான திட்டமிட்டு தேர்தல் ஆணையம் பணியாற்றினால் மட்டுமே சிறந்ததொரு ஜனநாயகத்தை வழங்க முடியும். வாக்களிக்க காட்டும் பிரச்சார விழிப்புணர்வு வியூகத்தை வாக்குக்காக பணத்தை கொடுப்பதை தடுப்பதிலும் அக்கரை காட்ட வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பு.

பணத்திற்காக வேட்பாளர்கள் செய்திகளை வெளியிட மறுக்கும் பத்திரிக்கைகள் !!

தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் பற்றிய செய்திகளை எவ்வித எதிர்பார்பபும் இன்றி செய்திகளை வெளியிட வேண்டியது பத்திரிக்கை தர்மம். ஆனால் ஒரு முன்னணி பத்திரிக்கை நிறுவனங்கள் வேட்பாளர்களின் செய்திகளை வெளியிட கட்டணம் நிர்ணயத்துள்ளது. மேலும் சில பத்திரிக்கைகள், விளம்பரம் கொடுத்தால்தான் வேட்பாளர் செய்தி வெளியிடுவது என சில நிபந்தனைகளை விதிக்கிறது.

பணம் இல்லாமல் போட்டியிடும் வேட்பாளர்கள் பத்திரிக்கைகளில் செய்தி வெளிவர கட்டாயம் விளம்பரமோகவோ, கட்டணமாகவோ செலுத்தும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இது ஜனநாயக விரோதமாகும்.

பத்திரிக்கை என்பது ஜனநாயகத்தின் 4 ஆம் தூண் மட்டும் அல்லாமல், ஜனநாயகத்தில் நீதிமன்றறம், நாடு, மொழி, இனம் என அனைத்து தப்பிலும் புறக்கணிக்கப்பட்ட மக்களின் கடைசி அடைக்கலம் பத்திரிக்கை ஆகும். பத்திரிக்கை துறை முறையாக ஜனநாயகம் மலர வேட்பாளர்களின் செய்தி வெளியிட கட்டணம் என்பது தேர்தல் ஆணையம் கட்டுப்படுத்த வேண்டிய ஒன்றாகும்.

பணக்காரர்களுக்கு ஒரு சேவையும், பணம் வழங்காதவர்களுக்கு ஒரு சேவையும் வழங்கினால் அது பத்திரிக்கை தர்மம் ஆகாது.

அண்மைச் செய்திகள்


Copyright 2015 - © 2024 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!