Education Loan Camp : Perambalur Collector Information!
தமிழக அரசின் ஆணைப்படி மாவட்ட நிர்வாகம், மாவட்ட முன்னோடி வங்கி மற்றும் அனைத்து வங்கிகள் இணைந்து நடத்தும் கல்விகடன் முகாம் பெரம்பலூர் ரோவர் பள்ளி வளாகத்தில் வருகின்ற பிப்.15 அன்று காலை 10.00 மணியளவில் நடைபெற உள்ளது. இந்த கல்விகடன் முகாமில் தொழில்முறை படிப்பு பயிலும் மற்றும் கல்விகடன் பெறவிரும்பும் அனைத்து மாணவ,மாணவிகளும் கலந்து கொண்டு பயன்பெறலாம்.
முகாமிற்கு வரும் மாணவர்கள் மற்றும் பெற்றோர்களது பான் கார்டு, ஆதார் கார்டு ஆவணங்களையும் பாஸ்போர்ட் அளவு புகைபடம் மற்றும் மாணவர்களின் 10,12-ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ், 12-ம் வகுப்பு மாற்று சான்றிதழ், குடும்ப வருமானசான்று, கல்லூரி சேர்க்கைகான சான்று, கல்விசான்று கல்லூரி கட்டண அறிக்கை ஆகிய ஆவணங்களின் அசல் மற்றும் நகல் சான்றிதழை கொண்டு வர வேண்டும்.
கல்விகடன் முகாமிற்கு வருவதற்கு முன்பாக https://www.vidyalakshmi.co.in என்ற இணையத்தளதில் விண்ணப்பித்து, விண்ணப்பித்த படிவத்தின் நகலை கொண்டுவர வேண்டும். இம்முகாமினை மாணவர்கள் நல்ல முறையில் பயன்படுத்திக்கொள்ளுமாறு பெரம்பலூர் கலெக்டர் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.