Elected unopposit for the Mohanur Salem Co-operative Sugar Mill post of Chairperson and Vice president


மோகனூர் சேலம் கூட்டுறவு சர்க்கரை ஆலை தலைவர் மற்றும் துணைத்தலைவர் பதவிகளுக்கு போட்டியின்றி தேர்வு பெற்றுள்ளனர்.

நாமக்கல் மோகனுாரில் உள்ள சேலம் கூட்டுறவு சர்க்கரை ஆலையில் மொத்த உறுப்பினர்கள் 33 ஆயிரத்து 97 பேர். அவர்களில் 17 பேர் தேர்வு செய்வதற்காக நிர்வாகக்குழு தேர்தல் கடந்த அக்டோபர் 12ம் தேதி நடைபெற்றது. அதில் பெண்களுக்கு, 5, பொது, 9, எஸ்.சி., எஸ்.டி., 3. பொது பிரிவுக்கு 120 பேர், பெண்கள் பிரிவில் 9 பேர், எஸ்.சி., எஸ்.டி., பிரிவில், 3 பேர் என மொத்தம் 132 பேர் வேட்புமனு தாக்கல் செய்தனர். இதில் பரிசீலனையில் 7 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டது.

மேலும் 85 பேர் வாபஸ் பெற்றனர். அவர்களில் பெண்கள் பிரிவில் 5 பேரும், எஸ்.சி., எஸ்.டி., 3 பேரும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர். மீதம் உள்ள 9 பொதுவில் 32 பேர் போட்டியிட்டனர். 8 கோட்டங்களில் 17 இடங்களில் நடைபெற்றது. இதில் 7 ஆயிரத்து 249 பேர் ஓட்டுப்போட்டனர்.

ஓட்டு எண்ணிக்கையில் அர்சுணன், ஜெயராஜன், குப்புத்துரை, ராக்கியன்ணன், சண்முகம், சுப்ரமணியம், சுரேஷ்குமார், வரதராஜன், வெற்றிவேல், ஆகிய 9 பேர் வெற்றி பெற்றனர். இதற்கிடையில் தேர்தலில் பல்வேறு முறைகேடுகள் நடந்துள்ளது என உறுப்பினர் பதவிக்கு போட்டியிட்ட தி.மு.க வக்கீல் கைலாசம் சென்னை உயர்நீதி மன்றத்தில் ரிட் மனு தாக்கல் செய்தார்.
அதையடுத்து கூட்டுறவு சர்க்கரை ஆலை நிர்வாகம் தேர்தல் முடிவுகளை அறிவிக்கவோ, வெளியிடவோ கூடாது என நீதிபதி சுந்தர் உத்தரவிட்டார். தொடர்ந்து நடைபெற்ற விசாரணையில் ரிட் மனு தள்ளுபடி செய்யப்பட்டது.

அதையடுத்து, மாநில கூட்டுறவு தேர்தல் கமிஷனர் ராஜேந்திரன் சேலம் கூட்டுறவு சர்க்கரை ஆலை நிர்வாகக்குழுவில் தலைவர், துணைத்தலைவர் தேர்தலுக்கான கூட்ட அறிவிப்பை வரும் 15ம் தேதி வெளியிடவும் மற்றும் 19ம் தேதி தலைவர், துணைத் தலைவர் தேர்தல் நடத்தவும் உத்தரவிட்டார். அதன்படி நேற்று, காலை 10 மணிக்கு நிர்வாகக்குழு உறுப்பினர்கள் பதவியேற்றனர். தொடர்ந்து தலைவர் பதவிக்கு சுரேஷ் குமார், துணைத் தலைவர் பதவிக்கு வெற்றிவேல் வேட்புமனு தாக்கல் செய்தனர்.

இதில் வேறு யாரும் வேட்பு மனுதாக்கல் செய்யவில்லை. எனவே இருவரும் தலைவர், துணைத்தலைவராக போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர். அதற்கான உத்தரவை தேர்தல் அலுவலரும் கூட்டுறவு சார் பதிவாளருமான முருகேசன் வழங்கினார்.

வெற்றி பெற்றவர்களுக்கு திருச்செங்கோ டு எம்எல்ஏ சரஸ்வதி, முன்னாள் எம்எல்ஏ.க்கள் மணி, கலாவதி, நாமக்கல் ஆவின் சேர்மன் ராஜேந்திரன், சிறுபான்மையினர் நலபிரிவு மாவட்ட செயலாளர் சாதிக்பாஷா,நாமக்கல் நகர கூட்டுறவு வங்கி தலைவர் காளியப்பன், ஒன்றிய செயலாளர்கள் மோகனூர் கருமண்ணன், நாமகிரிப்பேட்டை கிழக்கு பொன்னுசாமி, மேற்கு சுப்பிரமணி, மல்லசமுத்திரம் மோகன், ராசிபுரம் காளியப்பன் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் பங்கேற்று புதிதாக தேர்வு பெற்றுள்ள தலைவர், துணைத்தலைவர் மற்றும் நிர்வாக குழு உறுப்பினர்களுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

Tags:

அண்மைச் செய்திகள்

Join Free Now https://dsmatrimony.com/

Copyright 2015 - © 2024 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!