நூறு சதவீத வாக்காளர் பதிவு மற்றும் வாக்குப்பதிவினை வலியுறுத்தும் வகையில் செய்தி மக்கள் தொடர்புத் துறையின் நவீன எல்.இ.டி வாகனத்தின் மூலம் வாக்களிப்பதன் அவசியம் குறித்த வாக்காளர் வழிப்புணர்வு குறும்படங்களை கல்லூரி மாணவிகள் கண்டுகளித்தனர்.
இந்திய தேர்தல் ஆணையம் வருகின்ற சட்டமன்ற தேர்தலில் நூறு சதவீத வாக்குப்பதிவை எய்திட பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது.
அதன் ஒரு பகுதியாக வாக்காளர்களிடையே வாக்களிப்பதன் முக்கியத்துவத்தை எடுத்துக்கூறும் வகையில் விழிப்புணர்வு பேரணிகள், மனிதசங்கிலி, வாக்காளர் விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய துண்டு பிரசுரங்கள் வினியோகித்தல் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது.
பெரம்பலூர் மாவட்டம் முழுவதிலும் 18 வயது பூர்த்தியடைந்த அனைவரும் வாக்களிக்க வேண்டும், நடைபெறவுள்ள சட்ட மன்றப்பொதுத் தேர்தலில் 100 சதவீத வாக்குப்பதிவை நாம் நடத்திடவேண்டும் என்பதை வலியுறுத்தும் வகையில் பொதுமக்கள் அதிகம் கூடும் பேருந்து நிலையங்கள், வாரச்சந்தைகள், கோவில் திருவிழாக்கள் உள்ளிட்ட இடங்களில் வீடியோ வாகனம் மூலம் வாக்காளர் விழிப்புணர்வு குறும்படங்கள் திரையிட திட்டமிடப்பட்டுள்ளது.
இதன் ஒரு பகுதியாக கல்லூரி மாணவர்களிடத்திலும் வாக்களிப்பதன் முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையில் வீடியோப் படக்காட்சிகள் நடத்தப்பட்டு வருகின்றது.
அதன் ஒரு நிகழ்வாக இன்று தனலட்சுமி சீனிவாசன் கல்வியியல் கல்லூரியிலும், குரும்பலூர் பாரதிதாசன் பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரியிலும் சுமார் 1500க்கும் மேற்பட்ட மேற்பட்ட மாணவ, மாணவிகளின் மத்தியில் செய்தி மக்கள் தொடர்புத்துறையின் நவீன எல்.இ.டி வாகனத்தின் வாயிலாக வாக்களிப்பதன் அவசியம் குறித்த வாக்காளர் விழிப்புணர்வு குறும்படங்கள் திரையிட்டு காண்பிக்கப்பட்டது.
இக்குறும்படங்களில் திரைப்பட முன்னனி நட்சத்திரங்களாகிய நடிகர்கள்; கமலஹாசன், சூர்யா, சசிகுமார், விஜய்ஆண்டனி மற்றும் விளையாட்டு வீரர்கள்களில் அஷ்வின், தினேஷ், கார்த்திக் உள்ளிட்ட பிரபலங்கள் நடித்த குறும்படங்களும்,
மாணவர்களை கவரும் விதத்தில் இந்திய தேர்தல் ஆணையத்தால் தயாரிக்கப்பட்ட அனிமேஷன் குறும்படங்களும்; திரையிடப்பட்டது.
மாணவ-மாணவிகள் பங்கேற்றனர். மேலும், வாக்களிப்பதன் அவசியம் குறித்த துண்டு பிரசுரங்களை கல்லூரியின் முதல்வர் சாந்தலெட்சுமி மாணவ, மாணவிகளுக்கு வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு துறை அலுவலர்கள் பணியாளர்கள், கல்லூரி விரிவுரையாளர்கள், பேராசியர்கள் மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகள் பலர் கலந்து கொண்டனர்.