குன்னம் சட்டமன்றத்தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களை இயக்குவது குறித்து மண்டல அலுவலர்கள் விளக்கினார;கள்
பயிற்சி பெற்ற மண்டல அலுவலர்களில் குன்னம் தொகுதிக்கான 30 மண்டல அலுவலர்களும் இன்று குன்னம் சட்டமன்றத்தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் பொதுமக்களிடம் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களை எவ்வாறு இயக்குவது என்பது குறித்து விளக்கமாக எடுத்துரைத்தனர். மேலும், பொதுமக்களின் சந்தேகங்களுக்கும் பதில்களை வழங்கினர்.
இன்று (21.3.2016) முதல் 24.3.2016 வரை குன்னம் சட்டமன்றத்தொகுதிக்குட்பட்ட பகுதியிலும், 28.3.2016 முதல் 31.3.2016 வரை பெரம்பலூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பகுதிகளிலும் இந்த மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களை எவ்வாறு இயக்குவது என்பது குறித்த செயல்விளக்கம் பொதுமக்களிடையே விளக்க உள்ளனர்.