Petition with the lack of action at the local positions bids, boycott near in Perambalur
பெரம்பலூர் மாவட்டம் வேப்பூர் ஒன்றியத்தில் உட்பட்ட பேரளி கிராமம். இந்த கிராமத்தில் நேற்று முன்தினம் அந்த ஊரை சேர்ந்த ஒரு பகுதியினர் ஒன்றுதிரண்டு பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் சாந்தா தேர்தல் பார்வையாளர் ஆகியோரை சந்தித்து அவர்களது ஊரில் உள்ளாட்சி பதவிகள் ஏலம் விடப்பட்டதாகவும், முறையாக ஜனநாயகப்படி தேர்தல் நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மனு கொடுத்தனர். ஆனால், அதன் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்காத காரணத்தினால் நேற்று கருப்புக் கொடி கட்டி கண்டனம் தெரிவித்த நிலையில், இன்று தேர்தல் நடந்து வரும் வேளையில், அக்கிராமத்தில் ஆதிதிராவிட வகுப்பைச் சேர்ந்த சமூகத்தினர், இன்று தேர்தலைப் புறக்கணித்து வாக்களிக்காமலேயே வீட்டிலேயே இருந்து வருகின்றனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News Today - Kalaimalar.

error: Content is protected !!