Election campaign dispute near Perambalur: 2 BJP members injured! Police investigation!
பெரம்பலூர் எம்.பி தொகுதியில் தேர்தல் பிரச்சாரம் உச்ச கட்டத்தை அடைந்து வருகிறது, பெரம்பலூர் தொகுதியில் முக்கியமன நட்சத்திர தொகுதியாக போட்டியிடும் வேட்பாளர்களால் மாறி உள்ளது.
தற்போது, திண்ணைப்பிரச்சாரம், வீதிவீதியாக பிரச்சாரம், தெருமுனைப் பிரச்சாரம், ஆட்டோ பிரச்சாரம், துண்டு பிரசுர பிரச்சாரம், பொதுக் கூட்டம் பிரச்சாரம், கிராம கிரமாக பிரச்சாரங்கள் தீவிரம் அடைந்துள்ளது.
அதற்கு சமூக வலைதளங்களில் பிரச்சாரம், வாக்குவாதம் என தீவிரமடைந்து பெரம்பலூரில் திமுக Vs பாஜக, தாமரையா Vs சூரியனா என போட்டா போட்டி நிலவுகிறது. பாஜக, ஐஜேகே உள்ளிட்ட தீவிரமாக திட்டமிட்டு, களப்பபணியாற்றி வருகின்றனர். தாமரை பாரிவேந்தர் மூலம் பெரம்பலூர் தொகுதியில் கொண்டு சேர்த்து வருகின்றனர்.
இந்நிலையில், பெரம்பலூர் அருகே உள்ள லாடபுரம் கிராமத்தில் ஏற்பட்ட மோதல் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பெரம்பலூர் பாஜக தெற்கு ஒன்றிய செயலாளராக இருப்பவர் கந்தசாமி (50), இன்று மாலை சுமார் 3 மணி அளவில், அவர் வாடகைக்கு விட்டுள்ள கடைக்கு முன்பு தேர்தல் பணிகளை அவரது தம்பி லடசுமணனுடன் செய்து கொண்டு இருந்தார்.
அதே ஊரைச் சேர்ந்த கேரளா ராஜா, அருகே உள்ள சலூன் கடையில் முடிதிருத்தம் செய்து வந்தவர் கந்தசாமியை பார்த்து 10 வருடங்களாக என்ன செய்து கொண்டிருந்தீர்கள் என கேட்டுள்ளார். இரு தரப்பிற்கும் வாக்குவாதம் ஏற்பட்டு அடிதடி பிரச்சனையானது. அதில் கந்தசாமிக்கு வலது கையில் உள்காயமும், லெட்சுமணனுக்கு வலது தலை மற்றும் முதுகுப் பகுதியில் ரத்த காயமும் ஏற்பட்டது.
உடனடியாக அங்கிருந்தவர் கந்தசாமியையும், லடசுமணனையும் பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு கொண்டு வந்து சேர்த்தனர்.
மேலும், இது குறித்த புகாரின் பேரில், சம்பவ இடத்திற்கு சென்ற பெரம்பலூர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், அப்பகுதியில் தகராறு குறித்த பதிவான சிசிடிவி கேமரா காட்சிகளை கைப்பற்றி தாக்குதலில் ஈடுபட்டவர்களை அடையாளம் காணும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
ராஜா உள்ளிட்டட சிலலை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். தேர்தல் நேரத்தில் இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.