சட்டமன்றப் பொதுத் தேர்தலுக்காக நியமிக்கப்பட்டுள்ள பறக்கும்படை, கண்காணிப்புக்குழு மற்றும் வீடியோ வியூவிங் குழுக்கள் செய்ய வேண்டிய் பணிகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் க.நந்தகுமார; இ.ஆ.ப., அவா;கள் தலைமையில் இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலில் பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் குறித்தும், தேர்தல் ஆணையத்தின் அறிவுரைகள் மற்றும் வழிகாட்டுதல் குறித்தும் தேர்தல் நடத்தும் அலுவலரால் விரிவாக எடுத்துரைக்கப்பட்டது. தேர்தலில் எந்த விதமான பாரபட்சமின்றி அனைத்து அலுவலர்களும் நேர்மையாக, நடுநிலைமையோடு செயல்படவும் தோ;தல் நடத்தை விதி முறைகள் அமலில் உள்ளதால் விதிமீறல்களை தீவிரமாக கண்காணித்து சட்டப் பூர்வமான நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என்றும் தேர்தல் நடத்தும் அலுவலரால் தெரிவிக்கப்பட்டது.
தேர்தல் விதிமீறல்களை கண்காணிக்க பறக்கும் படை, தீவிர கண்காணிப்புக்குழு, வீடியோ வியூவிங் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் பறக்கும் படையில் பெரம்பலூர் சட்டமன்ற தொகுதிக்கு வேளாண்மை அலுவலர் கண்ணன் (94842225901), கூட்டுறவுத் துறையின் முதுநிலை ஆய்வாளர்கள் ஆர்.ராஜேந்திரன் (9751023610), சிவக்குமார் (9994592877) ஆகியோர் தலைமையில் தனித்தனியே மூன்று குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.
குன்னம் சட்டமன்றத் தொகுதிக்கு வேளாண்மை அலுவலர் டி.செங்குட்டுவேல் (9894273152), கூட்டுறவுத் துறையின் முதுநிலை ஆய்வாளர் எஸ்.ரமேஷ் (9962866747), செந்துறை வட்டார வளர்ச்சி அலுவலர் டி.ஜெயலட்சுமி (7402607754) ஆகியோர் தலைமையில் தனித்தனியே குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு குழுவிலும் மூன்று காவலர்கள் பாதுகாப்பு பணிக்காக ஒதுக்கப்பட்டுள்ளனர்.
மேலும், தீவிர கண்கானிப்புக்குழுவில் பெரம்பலூர் சட்டமன்ற தொகுதிக்கு வேளாண்மை அலுவலர் கே.கருணாமூர்த்தி (9677830266), வேளாண்மை அலுவலர் ஆர்.நாகராஜன்(9655930466), தோட்டக்கலை அலுவலர் விஜயகான்டீபன்(9786377886) ஆகியோர் தலைமையில் தனித்தனியே மூன்று குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.
குன்னம் சட்டமன்றத் தொகுதிக்கு வேளாண்மை அலுவலர் ஜி.அசோகன்(9159849408), வேளாண்மை அலுவலர் ஏ.ரவிச்சந்திரன்(9487711987), செந்துறை துணை வட்டார வளர்ச்சி அலுவலர் குருமூர்த்தி(9751516795) ஆகியோர் தலைமையில் தனித்தனியே குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு குழுவிலும் மூன்று காவலர்கள் பாதுகாப்பு பணிக்காக ஒதுக்கப்பட்டுள்ளனர்.
மேலும் வீடியோ வியூவிங் குழுவில் பெரம்பலூர் தொகுதிக்கு சம்பத்குமார் (9159844146) தலைமையிலும், குன்னம் தொகுதிக்கு பழனிமுத்து(94439660156) நியமிக்கப்பட்டுள்ளனர் . இக்குழுவினர் பறக்கும் படை மற்றும் தீவிர கண்கானிப்புக்குழுவின் மூலம் எடுக்கப்படும் தேர்தல் விதிமுறைமீறல்கள் தொடர;பான வீடியோக்களை தேர;தல் நடத்தும் அலுவலருக்கும், தேர;தல் செலவின குழுவிற்கும் அனுப்பி வைக்கும்.
இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் ச.மீனாட்சி, வருவாய் கோட்டாட்சியர் பேபி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதிவியாளர் (பொது) மாரிமுத்து, வட்டாட்சியர் (தேர்தல்) செல்வராஜ் உள்ளிட்ட அனைத்து ஒருங்கிணைப்பு அலுவலர்களும் கலந்து கொண்டனர்.