தேர்தல் நடத்தும் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான நந்தகுமார் தெரிவித்துள்ளதாவது:
பெரம்பலூர் மாவட்டத்தில் தேர்தலை முன்னிட்டு தேர்தல் நடத்தை விதிமுறைகள் முறையாக கடைப்பிக்கப்பட்டு வருகின்றன.
பறக்கும் படை மற்றும் தீவிர கண்கானிப்பு குழுக்கள் மூலமாக தேர்தல் விதிமுறை மீறல்கள் 24 மணி நேரமும் கண்கானிக்கப்பட்டு வருகின்றன.
பெரம்பலூர் மாவட்டத்தில் தேர்தல் விதிமுறைகள்மீறி உரிய ஆவணங்களிலின்றி எடுத்துச் செல்லப்பட்டமைக்காக ரூ.8 லட்சத்த16 ஆயிரத்து 840 மதிப்பிலான ரொக்கம் மற்றும் ரூ.1 லட்சத்து 88 ஆயிரத்து 700 மதிப்பிலான பொருட்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.
இதில் பறக்கும் படையினரால் ரூ.7 லட்சத்து 43 ஆயுிரத்து 040 மதிப்பிலும் மற்றும் தீவிர கண்கானிப்புக் குழுவினரால் ரூ.2 லட்சத்து 62 ஆயிரத்து 500 மதிப்பிலான ரொக்கம் மற்றும் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
இதில் கடந்த மார்ச் 18 அன்று இரவு 9.45 மணியளவில் கோனேரிப்பாளையம் ஆத்தூர் பிரிவு சாலையில் ரா.சுப்பிரமணியன் என்பவர் உரிய ஆவணங்களிலின்றி எடுத்துசென்ற ரூ.1 லட்சத்து 33 ஆயிரத்து 480 ரொக்கத்தை பறக்கும் படை அலுவலர் கண்ணனால் கைப்பற்றப்பட்டு சார்நிலைக்கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டது.
மேற்படி கைப்பற்றப்பட்ட தொகை விவசாயிகளிடமிருந்து மக்காசோளத்தை வாங்கி வெங்கடேசன் என்ற தரகு வியபாரி மூலம் மக்காச்சோளம் விற்பனை செய்த வகையில் கிடைத்ததாக தெரிவித்து சுப்பிரமணியன் என்பவர் அதற்கான ஆவணங்களை சமர்பித்ததால் கைப்பற்றப்பட்ட ரூ.1,33,480 ரொக்கம் விடுவிக்கப்பட்டு ரா.சுப்பிரமணியன் வசம் ஒப்படைக்கப்பட்டது.
மேலும் கடந்த மர்ர்ச் 13 அன்று வேப்பந்தட்டை வட்டம் வெண்பாவூர் கைகாட்டி அருகில் பறக்கும் படை அலுவலர் ராஜேஷ்வரன் வாகன சோதனையில் ஈடுப்பட்டிருந்த போது பரமத்திவேலூரை சேர்ந்த சிக்கர் பாட்ஷா உரிய ஆவணங்களிலின்றி கொண்டு வந்த 151 அரிசிமூட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டது.
கைப்பற்றப்பட்ட 151 மூட்டைகளும் பெரம்பலூர் மாவட்டத்தில் ஒரு தனியார் கம்பெனியிலிருந்து கொள்முதல் செய்யப்பட்டு, அரிசி தரம் சரியில்லா காரணத்தினால் அவை திருப்பி அனுப்பும் போது பிடிப்பட்டது என தெரிவிக்கப்பட்டு உரிய ஆவணங்கள் சமர்பிக்கப்பட்டதால் கைப்பற்றப்பட்டு தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்ககழகம் கிட்டங்கியில் வைக்கப்பட்டிருந்த 151 அரிசி மூட்டைகளும் உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது, என தெரிவித்துள்ளார்.