Election of General, Expenditure and Police Observers for Perambalur District
இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, தமிழ்நாடு சட்டமன்ற பொதுத் தேர்தல் 2021 தேர்தல், வரும் ஏப்.6 அன்று நடைபெற உள்ளது. மே.2 – அன்று வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. அதனைத் தொடர்ந்து பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து நகர்ப்புற மற்றும் ஊரக பகுதிகளில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் பின்பற்றபட்டு வருகின்றன.
தேர்தலில் போட்டியிட உள்ள வேட்பாளர்கள் மற்றும் அரசியல் கட்சியினர் தேர்தல் நடத்தை விதிமுறைகளை முறையாக கடைபிடிக்கின்றார்களா என்பதனை கண்காணித்திட இந்திய தேர்தல் ஆணையத்தால் சட்டமன்ற தொகுதி வாரியாக பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
அதனடிப்படையில் 147.பெரம்பலூர் சட்டமன்ற(தனி) தொகுதிக்கு பொதுப்பார்வையாளராக ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்த வினய் சிங், குன்னம் சட்டமன்ற தொகுதிக்கு பொதுப் பார்வையாளராக மத்திய பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த சாசாங் மிஸ்ரா ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
பெரம்பலூர் மாவட்டத்தில் வேட்பாளர்கள் மற்றும் அரசியல் கட்சிகள் மேற்கொள்ளும் செலவுகளை கண்காணிக்க பெரம்பலூர் மற்றும் குன்னம் சடடமன்ற தொகுதிக்கு மகாராஷ்டிரா மாநிலத்திலிருந்து அரவிந்த் ஜி.தேசாய், செலவின பார்வையாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
பெரம்பலூர் மற்றும் குன்னம் சட்டமன்ற தொகுதிகளுக்கு காவல் பார்வையாளராக உத்ரகாண்ட் மாநிலத்தை சேர்ந்த ராஜிவ் ஷ்வரூப் நியமினம் செய்யப்பட்டுள்ளார் என்றும், அனைத்து அரசு அலுவலர்களும் பெரம்பலூர் மாவட்டத்தின் அரசு சுற்றுலா மாளிகை அலுவலகத்தில் தங்கி தங்களது பணிகளை மேற்கொள்ளவுள்ளதாக மாவட்ட தேர்தல் அலுவலரும்,கலெக்டருமான வெங்கட பிரியா தெரிவித்துள்ளார்.