Electrical leak, fire at plastic pot manufacturing company
பெரம்பலூர் 4வது வார்டு ஜமாலியா நகரில் சங்கர் (வயது 39) என்பவர் பிளாஸ்டிக் குடம் தயாரிக்கும் பணி செய்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு வழக்கம் போல் கடையை அடைத்துவிட்டு சென்றார். இந்நிலையில் நேற்று அதிகாலை 4 மணியளவில் கடையின் ஜன்னல் வழியாக புகை வருவதை பார்த்த அக்கம்பக்கத்தினர் உடனடியாக தீயணைப்புத்துறைக்கு தகவல் தெரிவித்தனர். விரைந்து வந்த தீயணைப்பு வீரார்கள் தீயில் சேதமடைந்த மிஷின்கள் மீது தண்ணீர் அடித்து தீயை அணைத்தனர். பின்னர் தீயணைப்பு துறையினர் அளித்த முதற்கட்ட தகவலில் மின்கசிவின் காரணமாக தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என தெரிவித்தனர்.