Electricity kills farmer near Perambalur
பெரம்பலூர் அருகே உள்ள சிறுமத்தூர் குடிக்காடு கிராமத்தைச் சேர்ந்தவர் பெருமாள் மகன் வெங்கடேசன் (வயது 35) இவருக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர். இவர் இன்று காலை சுமார் 7மணியளவில் தனது வயலில் தண்ணீர் பாய்ச்சி கொண்டு இருந்த போது அருகில் இருந்த மின்கம்பத்தில் இருந்து மின்சாரம் பாய்ந்து கொண்டிருந்த கம்பி ஒன்று வயலில் கிடந்துள்ளது. இதை கவனிக்காமல் வெங்கடேசன் அருகில் சென்ற போது அவர் மின்சாரம் பாய்ந்தது. இதில் துடிதுடித்து சம்பவ இடத்திலேயே வெங்கடேசன் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த மங்களமேடு போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று வெங்கடேசனின் உடலை கைப்பற்றி உடற்கூறாய்விற்கு பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.