Eligible candidates can apply for the State Youth Award
பெரம்பலூர் மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் ம.இராமசுப்பிரமணியராஜா விடுத்துள்ள மற்றொரு தகவல் :
தமிழக முதலமைச்சரின் 2014-2015ஆம் ஆண்டு சட்டப்பேரவையில் விதி எண்110-ன் கீழ் வெளியிட்ட அறிவிப்பைத் தொடர்ந்து சமுதாய வளர்ச்சிக்கு சேவையாற்றும் இளைஞர்களது பணியை அங்கீகரிக்கும் பொருட்டு, 2015 ஆம் ஆண்டு முதல் “முதலமைச்சா; மாநில இளைஞர் விருது” ஒவ்வொரு ஆண்டும் சுதந்திர தினத்தன்று 15 முதல் 35 வயது வரை உள்ள 3 ஆண்கள் மற்றும் 3 பெண்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. இந்த விருது ரூ.50,000- ரொக்கம், பாராட்டுப் பத்திரம் மற்றும் பதக்கம் ஆகியவைகளை உள்ளடக்கியதாகும்.
2017-ஆம் ஆண்டிற்கான முதலமைச்சர் மாநில இளைஞர் விருர் எதிர்வரும் 15.08.2017 அன்று நடைபெறும் சுதந்திர தின விழாவில் தமிழ்நாடு முதலமைச்சரால் வழங்கப்படவுள்ளது. மேற்கண்ட விருது பெற 15 வயது முதல் 35 வயது வரையுள்ள ஆண், பெண் ஆகியோர் விண்ணப்பிக்கலாம்.
கடந்த ஏப்ரல் 1, 2016 அன்று 15 வயது நிரம்பியவராக இருத்தல் வேண்டும். மற்றும் மார்ச் 31,2017 அன்று 35 வயதிற்குள்ளாக இருத்தல் வேண்டும். கடந்த நிதியாண்டில் 2016-2017 மேற்கொள்ளப்பட்ட சேவைகள் மட்டுமே பரிசீலிக்கப்படும்.
விருதிற்கு விண்ணபிக்கும் முன்பு குறைந்த பட்சம் 5 வருடங்கள் தமிழகத்தில் குடியிருந்தவராக இருத்தல் வேண்டும்( சான்று இணைக்கப்பட வேண்டும்). விண்ணப்பதாரர்கள் சமுதாய நலனுக்காக தன்னார்வத்துடன் தொண்டாற்றியிருக்க வேண்டும்.
அவ்வாறு அவர்கள் செய்த தொண்டு, கண்டறியப்படக் கூடியதாகவும், அளவிடக் கூடியதாகவும் இருத்தல் வேண்டும். மத்திய, மாநில அரசுகள், பொதுத் துறை நிறுவனங்கள், பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள், பள்ளிகளில் பணியாற்றுபவா;கள் இவ்விருதிற்கு விண்ணப்பிக்க இயலாது. விண்ணப்பதாரருக்கு உள்ள மக்களிடம் உள்ள செல்வாக்கு விருதிற்கான பரிசீலனையில் கணக்கிற் கொள்ளப்படும்.
இவ்விருதினை பெற விரும்புவோர் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் இணையதளம் www.sdat.tn.gov.in -லிருந்து விண்ணப்பத்தினை பதிவிற்க்கம் செய்து கொள்ளலாம்.
மேலும் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் 15.06.2017 மாலை 5.00 மணிக்குள் பெரம்பலூர் மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் அலுவலகத்தில் சமர்பிக்க வேண்டும்.