Employee killed near a truck collided near Perambalur: a driver who managed to escape chasing civilians hostage.

பெரம்பலூர் அருகே திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் போக்கு வரத்து விதியை மீறி சென்ற டிப்பர் லாரி மோதி ஏற்பட்ட விபத்தில் எம்.ஆர்.எஃப் டயர் தொழிற்சாலை ஊழியர் ஒருவர் பலி யானார்.

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி தாலுகா வெள்ளேரிப்பட்டு கிராம த்தை சேர்ந்தவர் கோவிந்தன் மகன் பார்த்தசாரதி(வயது 28), இவர் பெரம்பலூர் அருகே உள்ள எம்.ஆர்.எஃப் டயர் தொழிற்சாலையில் கடந்த 5 வருடமாக வேலை பார்த்து வந்தார்.

இந்நிலையில் ஊரடங்கு உத்தரவின் காரணமாக வேலை இல்லாமல் சொந்த ஊர் சென்ற பார்த்தசாரதி நேற்று டயர் தொழிற்சாலையில் வேலை செய்து விட்டு அவரது டூவீலரில் சொந்த ஊர் நோக்கி திருச்சி நேற்று இரவு சென்னை தேசிய நெடுஞ்சாலையில் வல்லாபுரம் பிரிவு சாலை பகுதியில் சென்று கொண்டிருந்தார்.

இதனிடையே போக்குவரத்து விதியை மீறி எதிர் திசையில் அவ்வழியே அதிவேகமாக வந்த டிப்பர் லாரி பார்த்தசாரதி ஓட்டிச் சென்ற டூவீலர் மீது மோதியது. இந்த விபத்தில் தலை, முகம் மற்றும் உடல் பகுதியில் பலத்த காயமடைந்த பார்த்தசாரதி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இதனையறிந்த டிப்பர் லாரி டிரைவர் லாரியை நிறுத்தாமல் அங்கிருந்து தப்பி சென்றார். விபத்து பற்றி தகவலறிந்த நெடுஞ்சாலை ரோந்து போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, உயிரிழந்தவரின் சடலத்தை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, தப்பியோடிய கவுல்பாளையம் கிராமத்தை சேர்ந்த லாரி டிரைவரான சுப்பிரமணியை கைது செய்து விசாரனை மேற்கொண்டு வருகின்றனர்.

விபத்தில் பலியான பார்த்தசாரதிக்கு கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் சத்யா(26) என்பவருடன்,திருமணம் நடைபெற்று மோஷிகா(1) என்ற ஒரு மகள் உள்ளார். கொரோன வைரஸ் தொற்றால் விடுமுறையில் சொந்த ஊரில் இருந்த பார்த்தசாரதி இன்று காலை தான் வேலைக்கு வந்து விட்டு டூவீலரில் ஊர் திரும்பிய போது விபத்துக்குள்ளாகி இறந்து விட்டார் என்பது குறிப்பி டத்தக்கது.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News Today - Kalaimalar.

error: Content is protected !!