Employees protest in Perambalur against power board issuing arbitrary board orders!

தமிழ்நாடு மின்வாரிய தலைமையகத்தில் உள்ள நிர்வாகப் பிரிவு மற்றும் தொழில்நுட்பம் சார்ந்த நிர்வாகப் பிரிவையும் ஒன்றிணைத்து அனைத்தையும் தலைமை பொறியாளர் பணியமைப்பின் கீழ் கொண்டு வந்து அதற்கான உத்தரவை வாரியம் பிறப்பித்துள்ளது. இதனால் 39 பணியிடங்கள் உபரியாக்கப் படவுள்ளது. பதவி உயர்வும் கேள்விக்குறியாக மாறுகிறது.

இதனால் சென்னையில் நிர்வாகப் பிரிவு ஊழியர்கள் தங்களது பணியை புறக்கணித்து வாரிய வளாகத்திற்குள் உள்ளிருப்பு போராட்டத்தை நடத்தி வருகின்றனர். மின்வாரியம் சமீப காலமாக தொழிற்சங்கங்களோடு கலந்து பேசாமல் தன்னிச்சையான நிர்வாக உத்தரவுகளை பிறப்பித்து வருவதை காண முடிகிறது. பெரம்பலூர் வட்ட மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன்பு மதியம் உணவு இடைவேளையில் நிர்வாக பிரிவை சீரழிக்காதே, தன்னிச்சையான வாரிய உத்தரவுகளை வெளியிடாதே, தொழிற்சங்கங்களை மதித்து நட, வாரிய கட்டமைப்பை சிதைக்காதே
என போன்ற கோஷங்களை எழுப்பி ஆதரவு ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது.

தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு திருச்சி மண்டல செயலாளர் எஸ். அகஸ்டின், பொறியாளர் கழகத்தின் வட்ட செயலாளர் வெங்டேசன், பொறியாளர் சங்கத்தின் நிர்வாகி சித்ரா, பாண்டியன், சிஐடியூ சங்க நிர்வாகிகள் பன்னீர்செல்வம்., கௌதமன், அண்ணாதுரை, தொழிலாளர் ஐக்கிய சங்கத்தின் நிர்வாகி ஆகியோர்கள் கலந்து கொண்டனர்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News Today - Kalaimalar.

error: Content is protected !!