EB Employers Protest in Perambalur, adjourned at the request of the police!

பெரம்பலூரில் பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்து இன்று காலை 09.00 மணியளவில் பெரம்பலூர் மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன்பு போராட்டம் நடத்த இருந்தனர். அதில், கொரானா ஊரடங்கு காலத்திலும் மக்களுக்கு தடையில்லா மின்சாரம் வழங்கிட பணிக்கு செல்லும் மின் ஊழியர்களையும், பொறியாளர்களையும் தடுத்து, உளைச்சலுக்கு ஆளாக்கும் நடவடிக்கையை கைவிடக் கோரியும், சாத்தான்குளம் காவல் நிலைய ஆய்வாளர், உதவி ஆய்வாளர்கள் ( ஸ்ரீதர், ரகு கணேஷ், பாலகிருஷ்ணன் உட்பட) சம்பந்தப்பட்ட காவலர்கள் மீது கொலை வழக்கு, மனித உரிமை மீறல், பொய் வழக்கு போட்டது, மருத்துவ சிகிச்சையை மறுத்தது உள்ளிட்ட உரிய பிரிவுகளின் கீழ் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்து, கைது செய்ய வேண்டும், அனைவரையும் முதலில் இடைநீக்கம் செய்ய வேண்டும், தென்காசி ஆட்டோ தொழிலாளி குமரேசன் மீது கொலைவெறி தாக்குதல் நடத்திய காவலர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கைகளை தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்புபின் பெரம்பலூர் வட்டக் கிளை சார்பில் போராட்டம் நடத்த இருந்தது. இதுகுறித்து சென்னை, மற்றும் பெரம்பலூர் காவல் துறை உயர் அதிகாரிகள் கோரிக்கையை ஏற்று அந்த போராட்டம் இன்று நாள் குறிப்பிடபடாமல் ஒத்தி வைக்கப்பபட்டது. இது பெரம்பலூர் வட்டக் கிளை உறுப்பினர்களுக்கு மாவட்டத் தலைவர் அகஸ்டின் தெரிவித்தார். அதன் பேரில், பின்னர் அனைவரும் கலைந்து சென்றனர்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!