Employment awareness training camp by KVIC in Perambalur! Bank loan approval for Rs.5.76 crore!

பாரதப் பிரதமரின் வேலை வாய்ப்பு உருவாக்கும் திட்டம் (PMEGP), கதர் கிராமத்தொழில்கள் ஆணையம், தமிழ்நாடு கதர் கிராமத்தொழில்கள் வாரியம் மற்றும் மாவட்ட தொழில் மையத்தால் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதில் 18 வயதுக்கு மேற்பட்டோர் கிராம/ நகர்புறங்களில் புதிதாக தொழில் தொடங்க வங்கி கடனுடன், 15% முதல் 35% வரை மானியத்துடன் வழிவகை செய்யபட்டுள்ளது.

நடப்பு நிதியாண்டில் பெரம்பலூர் மாவட்டத்தில் 2023- 2024 ஆண்டுக்கு, 201 திட்டங்களுக்கு ரூ.576.91 லட்சம் மானியத்துடன் வங்கி கடன் அனுமதி பெறப்பட்டுள்ளது.

இத்திட்டத்தின் விழிப்புணர்வு முகாம் பெரம்பலூரில் ஹோப் பயிற்சி மையத்தில் நடைப்பெற்றது. இத்திட்டத்தை பற்றிய விபரங்களை கேவிஐசி உதவி இயக்குநர் ஆர். வாசிராஜன் எடுத்துரைத்தார்.

மாவட்ட தொழில் மையத்தின் சார்பாக செயல்படுத்தப்படும் திட்டங்களை சர்வே & ஸ்டேஸ்டிகல் ஆய்வாளர் கண்ணனும், ஹோப் டிரஸ்ட் திட்ட இயக்குனர் திவ்யா ஆகியோர் செயல்படுத்தப்படும் பயிற்சிகள் குறித்தும் தெரிவித்தனர்.

, திருச்சி வடக்கு சர்வோதய சங்க செயலாளர் சுப்ரமணியன், உதவி இயக்குநர் செல்வி கருணாநிதி மற்றும் வளர்ச்சி அதிகாரி (ஒய்வு) கமல்தாஸ், மற்றும் பி.எஸ்.எஸ்.எஸ். சதிஸ்யேசுதாஸ் சுமார் 100க்கும் மேற்பட்டோர் இளம் தொழில் முனைவோர்கள் கலந்து கொண்டனர்.

அண்மைச் செய்திகள்

Join Free Now https://dsmatrimony.com/

Copyright 2015 - © 2024 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!