அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் அறிவிக்கப்படும் காலிபணியிடங்கள் தொடர்பான தகவல்கள் வேலைவாய்ப்பு துறையின் இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அரசு மற்றும் பல்வேறு பொதுத்துறை நிறுவனங்களில் அறிவிக்கப்படும் காலியிடங்கள் தொடர்பான தகவல்களை வேலைவாய்ப்பு துறையின் www.tnvelaivaippu.gov.in இணையதளத்தில் அறிந்துகொண்டு வேலை தேடுபவர்கள் பயன்பெறலாம். மேலும், இந்த விவரங்கள் அந்தந்த மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக தகவல் பலகையில் தெரிவிக்கப்படும்.
மேலும், அத்தகைய பணியிடங்களுக்கு நடத்தப்படும் போட்டி தேர்வுகள் குறித்த ஆலோசனைகள் வழங்கபடுவதுடன் இலவச பயிற்சி வகுப்புகள், மாதிரி தேர்வுகள் ஆகியவை பெரம்பலூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் இயங்கி வரும் தன்னார்வ பயிலும் வட்டத்தில் நடத்தப்பட்டு வருகிறது.
மேலும் விவரங்களுக்கு மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தை நேரில் தொடர்பு கொண்டு படித்த இளைஞர்கள் பட்டதாரிகள் பயன்பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.