Employment for former soldiers of the Namakkal District Collector Info
நாமக்கல் மாவட்ட ஆட்சியர் ஆசியா மரியம் விடுத்துள்ள தகவல் :
நாமக்கல் மாவட்டத்தைச் சார்ந்த முன்னாள் படைவீரர்கள், முன்னாள் படைவீரர் நல அலுவலகத்தில் வேலைவாய்பிற்காக பதிவு செய்து 2011, 2012, 2013, 2014, 2015 மற்றும் 2016-ம் ஆண்டுகளில் வேலைவாய்ப்பினை புதுப்பிக்கத் தவறியவர்களுக்கு சிறப்பு புதுப்பித்தல் சலுகை வழங்கி அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. எனவே படைப் பணியிலிருந்து வெளிவந்தபின் வேலைவாய்ப்பிற்காக பதிவு செய்த முன்னாள் படைவீரர்கள் நாமக்கல் மாவட்ட முன்னாள் படைவீரர் நல உதவி இயக்குநர் அலுவலகத்தினை நேரடியாக தொடர்பு கொண்டு காலாவதியான பதிவினை வரும் டிசம்பர் 31ம் தேதிகுள் புதுப்பித்து கொள்ளவேண்டும்.
* சேலம் ரயில்வே கோட்டத்தில் கேட் கீப்பர் பணியிடத்திற்கு 200 முன்னாள் படைவீரர்கள் ஒப்பந்த அடிப்படையில் பணியமர்த்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே விருப்பமுள்ள நாமக்கல் மாவட்டத்தினை சார்ந்த முன்னாள் படைவீரர்கள் தங்களது பெயரினை உதவி இயக்குநர் முன்னாள் படைவீரர் நல அலுவலகம், நாமக்கல் அலுவலகத்தில் வரும் 28ம் தேதிக்குள் நேரில் தெரிவிக்கவேண்டும் என தெரிவித்துள்ளார்.