Employment in Dubai Private Companies: Perambalur Collector V.Santha Information

பெரம்பலூர் ஆட்சியர் வே.சாந்தா விடுத்துள்ள தகவல் :

ஐக்கிய அரபு நாட்டிலுள்ள துபாயில் ஒரு முன்னணி நிறுவனத்தில் பணிபுரிய டிப்ளமோ Electrical/Mechanical தேர்ச்சி பெற்று மூன்று வருட அனுபவம் அல்லது பத்தாம் வகுப்புஃபன்னிரெண்டாம் வகுப்பு படித்து I.T.I (Electrical/Mechanical) தேர்ச்சியுடன் ஐந்து வருட பணி அனுபவமுள்ள Fire Fighting Technician, Fire Alarm Technician (மாத ஊதியம் ரூ.19,500- முதல் ரூ29,000-)மற்றும் Diesel Engine/Electrical Pump Technician (மாத ஊதியம் ரூ29,000ஃ-முதல் ரூ38,500-)தேவைப்படுகிறார்கள்.

தேர்ந்தெடுக்கப்படுபவர்களுக்கு திறமைக்கேற்றவாறு ஊதியம் நிர்ணயம் செய்யப்படும். இதுதவிர, மிகை நேர ஊதியம், இருப்பிடம் மற்றும் பிற சலுகைகள் ஐக்கிய அரபு நாட்டின் சட்ட திட்டத்திற்க்கேற்றவாறு வழங்கப்படும்.

மேற்குறிப்பிட்ட பணியிடங்களுக்கு 35 வயதிற்குட்பட்ட நபர்கள் தங்களின் சுயவிவரங்கள் அடங்கிய விண்ணப்பத்துடன் கல்வித்தகுதி, அனுபவச் சான்றிதழ், செல்லத்தக்க பாஸ்போர்ட் நகல்கள் மற்றும் புகைப்படத்துடன் omcsfe2018@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு 20.12.2018க்குள் அனுப்பிவைக்க வேண்டும்.

மேலும் ஊதியம் மற்றும் பணி விவரங்களுக்கு அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்தின் அலுவலக தொலைபேசி எண்கள்:9566239685, 8220634389, 044-22505886ஃ 22502267 மூலமாகவும் அல்லது www.omcmanpower.com என்ற வலைதளத்திலும் அறிந்து கொள்ளலாம்.

இந்திய அரசின் வெளிநாடுவாழ் இந்தியர்களுக்கான விவகார அமைச்சகத்தால் வழங்கப்பட்ட அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்தின் முகவர் எண். RC No.B-0821/CHENNAI/CORPN/1000+/5/308/84 ஆகும்.

இவ்வாறு அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் சுனீல் பாலீவால் தெரிவித்துள்ளதற்கிணங்க, பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்த வேலை நாடுவோர் பயன்பெறும் வகையில் தெரிவித்துள்ளார்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!