Employment Opportunity Program for Educated Unemployed Youths: Call to Apply

பெரம்பலூர் மாவட்ட தொழில் மையம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

தமிழ்நாட்டில் வேலைவாய்ப்பினை உருவாக்கும் நோக்கத்தின் அடிப்படையிலும், குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களின் வளர்ச்சிக்காகவும் படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான வேலை வாய்ப்பு உருவாக்கும் திட்டத்தின் கீழ் கடன் வழங்கும் திட்டம் தமிழக அரசின் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை செயல்படுத்தப்பட்டு வருகிறது.

படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் இந்த திட்டத்தின் கீழ் தொழில் தொடங்க உற்பத்தி பிரிவில் ரூ.10 லட்சம் வரையிலும், சேவைப்பிரிவில் ரூ.3 லட்சம் வரையிலும், வியாபாரங்களுக்கு ரூ.1 லட்சம் வரையிலான திட்டங்களுக்கு மானியத்துடன் கூடிய கடனுதவிக்கு வங்கிக்கு விண்ணப்பங்கள் பரிந்துரை செய்யப்பட்டு வருகிறது.

தற்போது தமிழக அரசின் அரசாணையின்படி குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை வியாபாரம் மற்றும் சேவை சார்ந்த தொழில்களுக்கு திட்ட மதிப்பீடு உச்ச வரம்பு முறையே ஒரு இலட்சம் மற்றும் 3 இலட்சத்திலிருந்து ரூ.5 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.

குடும்ப ஆண்டு வருமான உச்ச வரம்பு ரூபாய் 1.5 லட்சத்தில் இருந்து ரூ.5 லட்சமாக ஆக உயர்த்தி ஆணையிடப்பட்டுள்ளது. இதன் மூலம் நல்ல மூலதனத்துடன் கூடிய தொழில் தொடங்க வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது.

இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பித்து வங்கிகடன் பெறும் பயனாளிக்கு திட்ட மதிப்பீட்டில் 25 சதவீதம் மானியமாக அதிகபட்சமாக ரூபாய் 1 லட்சத்து ,25 ஆயிரம் வரை தமிழக அரசு வழங்கும். தகுதியான தொழில்களாக நேரடியான விவசாயம் தவிர பொருளாதார அடிப்படையில் லாபகரமான தொழில்கள் தொடங்கலாம்.

திட்ட இலக்கீடாக பெரம்பலூர் மாவட்டத்திற்கு 2019-20 ஆம் நிதியாண்டில் 70 நபர்கள் பயன்பெற ரூபாய் 45.00 லட்சம் மானியம் வழங்க தமிழக அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது.

எனவே, இத்திட்டத்தின் கீழ் படித்த வேலை தேடும் இளைஞர்கள் தொழில் துவங்கிட www.msmeonline.tn.gov.in/uyegp என்ற இணையதள முகவரியில் விண்ணப்பித்து பயனடையலம். மேலும் விவரங்களுக்கு பொது மேலாளர், மாவட்ட தொழில் மையம், மாவட்ட ஆட்சியர் பெருந்திட்ட வளாகம், பெரம்பலுhர் அவர்களை நேரிலோ, 04328 – 224595, 04328 – 225580 என்ற தொலைபேசி எண்ணிலோ அணுகலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!