English language skills training; Certification for Talent students; Presented by Almighty School Chairman Ramkumar.

பெரம்பலூர் அருகே சிறுவாச்சூர் ஆல்மைட்டி வித்யாலயா பப்ளிக் பள்ளியில் மாணவ மாணவிகளுக்கான ஆங்கிலமொழி திறன் வளர்த்தல் (2019 – 2020) கல்வி ஆண்டிற்கான பாராட்டு சான்றிதழ் வழங்கும் விழா நடைபெற்றது. பள்ளி முதல்வர் சிவகாமி அனைவரையும் வரவேற்றார். பள்ளி தாளாளர் டாக்டர் ராம்குமார் தலைமை வகித்தார்.நிகழ்ச்சியில் மை குரு கன்சல்டன்சி நிர்வாகி செந்தில்குமார் கலந்து கொண்டு பள்ளி மாணவ மாணவிகள் 14 வயதிற்குள் தங்களின் ஆங்கில மொழி ஆளுமைத் திறனை தயக்கமின்றி புரிதலோடு வெளிக்கொண்டு வருவது குறித்து பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்கள் குழந்தைகளின் தன்மைக்கேற்ப நிலைப்படுத்த வேண்டும். அப்படி தவறும் பட்சத்தில் 14 வயதிற்குபிறகு மிகுந்த சிரமம் எடுக்கவேண்டி வரும் என தெரிவித்தார். பின்னர் பள்ளி மாணவ மாணவிகள் தேசியக்கொடி பற்றியும், கல்வியின் முக்கியத்துவம், விவசாயத்தின் முக்கியத்துவம், நல்ல பழக்க வழக்கங்கள், சாலை போக்குவரத்து பற்றிய விளக்கவுரை, கொரோனா வைரஸ் குறித்த விழிப்புணர்வு, தனித்துவ முறையில் ஆங்கிலத்தில் தயக்கமில்லாத தெளிவான பேச்சு குறித்த 25 வகையான நேரடி நிகழ்ச்சிகளை நடத்தினார். பின்னர், மாணவ மாணவிகளுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் பள்ளியின் செயலாளர் இரா.சிவக்குமார். மற்றும் பள்ளியின் பங்குதாரர்கள், துணை முதல்வர் சாரதா செந்தில்குமார், ஆசிரியைகள் ஹேமா, சந்திரோதயம் மற்றும் பெற்றோர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

படவிளக்கம்:
பெரம்பலூர் அருகே உள்ள சிறுவாச்சூர் ஆல்மைட்டி வித்யாலயா பப்ளிக் பள்ளியில் நடந்த ஆங்கில மொழி தனித் திறன் பயிற்சியில் சிறப்பிடம் பெற்ற மாணவர்களுக்கு அப்பள்ளி சேர்மன் ராம்குமார் வழங்கிய போது எடுத்தப் படம். மை குரு கன்சல்டன்சி நிர்வாகி செந்தில்குமார், பள்ளி முதல்வர் சிவகாமி, செயலாளர் இரா.சிவக்குமார், பள்ளியின் பங்குதாரர்கள், உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!