English New Year: Special Worship at Perambalur, Temples, Churches

புத்தாண்டை முன்னிட்டு பெரம்பலூர் மாவட்டகோவில்கள்–தேவாலயங்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

ஆங்கில புத்தாண்டு நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வரப்படுகிறது. இதையொட்டி கோவில்கள் மற்றும் கிறிஸ்தவ ஆலயங்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. அதன்படி பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் ஒன்றியத்தில் உள்ள பாடாலூர் பூமலை சஞ்சீவிராயர் கோவில், வழிதுணை ஆஞ்சநேயர் கோவில், பெரம்பலூரை அடுத்த சிறுவாச்சூரில் ஆதிசங்கரர் வழிபட்ட பெருமைபெற்ற மதுரகாளியம்மன் கோவில்,பெரம்பலூரில் உள்ள பஞ்சபாண்டவருக்கு தனிசன்னதி கொண்ட மரகதவள்ளி தாயார் சமதே மதனகோபால சாமி மற்றும் பிரம்மபுரீஸ்வரர் கோவில்,செடடிகுளம் தண்டாயுதபாணி சுவாமி கோவில், ஏகாம்பரேஸ்வரர் கோவில் உள்ளிட்ட மாவட்டத்தில் உள்ள பல்வேறு கோவில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

இதில் சுவாமிகளுக்கு பால், பன்னீர், சந்தனம், குங்குமம், விபூதி உள்ளிட்ட பல்வேறு வாளசனை திரவியங்களை கொண்டு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. மேலும் பல்வேறு மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டது. சிறப்பு வழிபாட்டில் பாடாலூர், இரூர், பெருமாள்பாளையம், ஆலத்தூர்கேட், காரை, தெரணி, திருவிளக்குறிச்சி, நாரணமஙகலகம், நாட்டார்மங்கலம், கூத்தனூர், சீதேவிமங்கலம், செட்டிகுளம், பொம்மனப்பாடி, குரூர், மாவலிங்கை உள்ளிட்ட சுற்றுப்புற கிராமங்களை சேர்ந்த பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு சிறப்பு வழிபாடு நடத்தினர்.மேலும் நண்பர்கள், உறவினர்களுக்கு கேக் வெட்டி, இனிப்புகள் வழங்கி புத்தாண்டை கொண்டா மகிழ்நதனர்.

தேவாலயங்கள்

பாடாலூர் புனித பிரான்சிஸ் பேராலயம் மற்றும் செட்டிகுளம் கிறிஸ்தவ பேராலயத்திலும் புத்தாண்டை முன்னிட்டு கூட்டு திருப்பலி பிரார்த்தனையும், ஆராதனைகளும் நடைபெற்றது. இதில் அப்பகுதியை சேர்ந்த ஏராளமான கிறிஸ்துவர்கள் கலந்து கொண்டு சிறப்பு பிரார்த்தனை நடத்தினர். மேலும் பெரம்பலூரில் உள்ள புனித பனிமயமாதா திருத்தலத்தில் நள்ளிரவு சிறப்பு திருப்பலி நடந்தது. இதில் பலர் கலந்து கொண்டனர். சிறப்பு திருப்பலியில் பனிமயமாதா தேவாலய பங்கு உறுப்பினர்கள், கிறிஸ்தவ கன்னிகையர், கத்தோலிக்க சங்க நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

அண்மைச் செய்திகள்

Join Free Now https://dsmatrimony.com/

Copyright 2015 - © 2024 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!