
Entrepreneurial Seminar at Namakkal Government Women’s College
நாமக்கல் அரசு மகளிர் கல்லூரியில் தொழில் முனைவோர் கருத்தரங்கம் நடைபெற்றது.
நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் அரசு மகளிர் கல்லூரி பொருளியல் துறை சார்பில் கல்வி சார்ந்த புத்தாக்க மற்றும் தொழில் முனைவோர் வளர்ச்சி கருத்தரங்கம் நடைபெற்றது. கருத்தரங்கிற்கு கல்லூரி முதல்வர் சுகுணா வரவேற்றார்.
இதில் சென்னை இடிஐஐ பயிற்சி ஒருங்கிணைப்பாளர் சிவேனசன், நாமக்கல் சப்-கலெக்டர் கிராந்தி குமார் பதி உள்ளிட்ட பலர் பங்கேற்று பேசினர். இதில் தொழில் முனைவோர் உற்பத்தி செய்யும் பொருட்களை சந்தைப்படுத்துதல், அரசின் மானியத் திட்டங்கள், நிறுவனத் தரச்சான்று, மத்திய அரசின் திட்டங்கள் மற்றும் சலுகைகள் குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது.
பொருளியல் துறைத்தலைவர் புவனேஸ்வரி நன்றி கூறினார். இதில் கல்லூரி பேராசிரியர்கள் மற்றும் மாணவில் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.