Entrepreneurs inaugurated a new vegetable market office in Poolambadi!
பூலாம்பாடியில் உழவர் உற்பத்தியாளர்கள் அமைப்பு அலுவலகத்தை, பன்னாட்டு தொழிலதிபர் டத்தோ பிரகதீஸ்குமார், டத்தோ மணிவாசகம் ஆகியோர் திறந்து வைத்தனர்.
சேலம் மாவட்டம் தலைவாசலில் இருப்பது போன்று மிகப்பெரிய அளவிலான தினசரி காய்கறி மார்க்கெட் பெரம்பலூர் மாவட்டம் பூலாம்பாடியில் அமைப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
பூலாம்பாடியில் இருந்து கோயம்பேடு மார்க்கெட்டிற்கும், மலேசியா நாட்டிற்கும் காய்கறிகளை அனுப்பி வைக்கும் திட்டமும் உள்ளது. இப்பகுதியில், காய்கறி சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு தேவையான ஆலோசனைகள், வழிகாட்டுதல்கள்,உதவிகள் ப்ளஸ்மேக்ஸ் நிறுவனத்தின் மூலம் செய்யப்பட உள்ளது.
காய்கறிக்கு சராசரியாக நல்ல விலை கிடைத்தால் விவசாயிகளின் வாழ்வாதாரம் உயர்த்த வேண்டும் என்பதால் தொழிலதிபர் டத்தோ.பிரகதீஸ்குமார் இந்த முயற்சியை சேவை நோக்குடன் முன்னெடுத்து வருகிறார். ஆர்வம் கொண்ட பல விவசாயிகள் காய்கறி பயிரிட சம்மதம் தெரிவித்து வருவாயை பெருக்க ஆர்வமுடன் உள்ளனர். இதுதொடர்பாக இரு ஆலோசனை கூட்டங்களும் நடந்து முடிந்துள்ளது.
இந்நிலையில், உழவர் உற்பத்தியாளர்கள் அமைப்பு அலுவலகத்தின் திறப்பு விழா நடைபெற்றது. அதில் டத்தோ பிரகதீஸ்குமார் கலந்து கொண்டுஅலுவலகத்தை திறந்து வைத்தார். பின்னர் அவர் பேசும் போது,அனைவரின் கூட்டு முயற்சியோடு இந்த திட்டம் செயல்படுத்தப்படுகிறது.இதை வெற்றிகரமாக செயல்படுத்துவதற்கு அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்றார்.
விழாவில் மலேசியா டத்தோ மணிவாசகம், டத்தோ நேர்முக உதவியாளர் மணி, பூலாம்பாடி பேரூராட்சி தலைவர் பாக்யலட்சுமி, கவுன்சிலர்கள் ராமதாஸ், மாணிக்கம் மற்றும் கடம்பூர் பாலு, அருண்,ஆறுமுகம், அக்ரி நவநீதன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.