Environment Day Celebration in manickampalayam
மாணிக்கம்பாளையத்தில் உலக சுற்றுச்சூழல் தின விழா நடைபெற்றது.
நாமக்கல் மாவட்டம், மாணிக்கம்பாளையம் மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தின் சார்பில், அரசு மேல்நிலைப்பள்ளியில் உலக சுற்றுச்சூழல் தினம் கொண்டாடப்பட்டது.
நிகழ்ச்சியில் பிளாஸ்டிக் ஒழிப்பு குறித்து மாணவர்கள் உறுதிமொழியேற்றனர். சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்து பள்ளி மாணவ மாணவிகள் கலந்துகொண்ட விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
மாணவ மாணவிகளுக்கு பேச்சுப்போட்டி, கட்டுரைப்போட்டி, ஓவியப்போட்டி உள்ளிட்ட போட்டிகள் நடைபெற்றன. பள்ளித் தலைமையாசிரியர் (பொ) நாகராஜன், பசுமைப்படை ஒருங்கிணைப்பாளர் ராமு. ஆசிரியர் ராஜ்குமார் உள்ளிட்ட பலர் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.