Equality Pongal Celebration at Perambalur Government Hospital
பெரம்பலூர் மாவட்ட, ஏ.ஆர்.டி மையம், மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுபாட்டு அலகு இணைந்து நடத்திய சமத்துவ பொங்கல் விழா மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுபாட்டு அலுவலர், துணை இயக்குனர் மருத்துவர். சம்பத் தலைமையில் இன்று மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் நடைபெற்றது.
இவ்விழாவில் உரி அடித்தல், லெமென் ஸ்பூன், இசை நாற்காலி, போன்ற போட்டிகள் ர்ஐஏ ஆல் பாதிக்கபட்ட மக்களுக்காக நடைப்பெற்றது. வெற்றி பெற்ற நபர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. மேலும் இந்நிகழ்ச்சியில் 200க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர். அனைவருக்கும் சக்கரை பொங்கல், வெண்பொங்கல், கூட்டு வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் மருத்துவமனை கண்காணிப்பாளர் தர்மலிங்கம், ஏ.ஆர்.டி மருத்துவ அலுவலர் ரா.திவ்யா, மாவட்ட திட்ட மேலாளர் ம.சிரில், மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுபாட்டு மேற்பார்வையார் சு.சுமதி மற்றும் ஏ.ஆர்.டி மைய பணியாளர்கள், நம்பிக்கை மைய பணியாளர்கள், சுகவாழ்வு மைய பணியாளர்கள், இரத்தவங்கி பணியாளர்கள், NGO பணியாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.