Equipment for the differently abled in Perambalur was provided by Omega Rekha Federation!
பெரம்பலூர் மாவட்ட அனைத்து வகை மாற்றுத்திறனுடையோர் சங்கங்களின் கூட்டமைப்பு மாற்றுத் திறனாளிகளுக்கு உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி, பெரம்பலூர் சங்கு அருகில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் நடந்த மாவட்ட செயலாளர் பி. சுப்பிரமணியன் தலைமையில் நடந்தது. மாவட்ட துணை தலைவர் கே.சுப்ரமணியன் முன்னிலை வகித்தார்.
இதில் மாவட்ட அனைத்து வகை மாற்றுத்திறனுடையோர் சங்கங்களின் கூட்டமைப்பு பரிந்துரையின் பேரில் ஒமேகா ரேகா பெடரேஷன் சார்பில் நிறுவனர் டாக்டர் தினேஷ் கலந்துகொண்டு 16 பேருக்கு செயற்கை கால்களும், இரண்டு பேருக்கு செயற்கை கால் உதிரிகளும், 2 சிறு குழந்தைகளுக்கு காலிபர் சூவும், 4 பேருக்கு உயர்ரக வெயில் செயலர்களும், 2 பேருக்கு வாக்கர் வழங்கிய ஆகியவற்றை இலவசமாக வழங்கினார். டாக்டர் பிரபு மற்றும் வட்டார கல்வி ஆய்வாளர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.